Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM
‘தென்னைய வச்சவன் தின்னுட்டுச் சாவான்; பனைய வச்சவன் பார்த்துட்டு சாவான்’ என்ற சொலவடை கிராமப் புறங்களில் சொல்லப் படுவதுண்டு. கன்றுகளாய் வைக்கப்பட்ட தென்னை நான்கைந்து ஆண்டுகளில் பலன் தந்து விடும். ஆனால், பனை மரமோ 20 ஆண்டுகளைக் கடந்தே பலன் தரும். ஆனாலும், அது தரும் பலன் சொல்லி மாளாது. நுனி முதல் அடி வரை அத்தனையும் பயனாகும் பனை மரம் ஒரு ‘கற்பகத் தரு’.
தமிழ்நாட்டின் மாநில மரமான பனை.இன்று செங்கல் சூளைக்காக அழிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு பொருளாதாரத்தின் தூண்களாக விளங்கிய வற்றில் பனைமரங்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. கதர் மற்றும் கிராமத்தொழில்வாரியம்அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி தமிழ் நாட்டில் சுமார் 5 கோடி பனைமரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுஒட்டுமொத்த இந்தியாவிலும் காணப்படும் பனைகளில் பாதியளவு ஆகும்.
பனைகள் பொதுவாகப் பயிரிடப் படுவதில்லை, இயற்கையிலே தானா கவே வளர்ந்து பெருகுகின்றன. இளம்பனைகள்வடலிஎன்று அழைக் கப்படுகின்றன. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார்30 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை.
தமிழ்நாட்டின் மாநிலமரமாக அறிவிக்கப்பட்டுள்ள பனைமரங்கள் பல்வேறுகாரணங்களால் இப்போது வேகமாகஅழிந்து வருகின்றன. வறட்சி, கருவேல மரங்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி உள்ளிட்டஇயற்கையான காரணங்களால் பனைமரங்கள்ஒருபுறம் அழிந்து வருகின்றன. இன்னொருபுறம் செங்கல் சூளைகளுக்கானமுதன்மை எரிபொருளாக பனைமரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால்காய்த்துக் கொண்டிருக்கும் மரங்கள் கூட வெட்டி வீழ்த்தப்படு கின்றன. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் இந்த பனை மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்றன.
பனையின் சிறப்புகள் பற்றி விவரம் அறிந்த விவசாயிகள் கூறியதாவது: இது முறையாகப் பயிரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒரு தாவரமாக இல்லா திருப்பினும், இதிலிருந்து மக்கள் ஏராளமான பயன்களைப் பெறுகிறார்கள். இதன் நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ளவேர் வரையிலும், முளைவிட ஆரம்பித்ததிலிருந்து, நெடுங்காலத்துக்கு பனைகளால் பயன் உண்டு.
பனையில் இருந்து பல வகையான உணவுப் பொருட்களும், உணவல்லாத வேறு முக்கியமான பொருட்களும் பெறப்படுகின்றன. முற்காலத்தில் பனையோலைகளே எழுத பயன்பட்டு வந்தன. இன்றும் பலபழைய நூல்களைப் பனையோலைச் சுவடிகள் வடிவிலேயே காணலாம். பலகட்டிடப் பொருட்கள், கைப்பணிப் பொருட்கள் மற்றும் தும்பு, நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருட்கள் பனையிலிருந்து பெற முடியும். பொதுவாக, இதுவளரும் இடங்களிலெல்லாம், வசதியற்ற ஏழை மக்களின் பொருளாதார நிலையுயர, அடித்தளமாக விளங்குகிறது.
பனைமரத்தில்இருந்து ஆண் டொன்றுக்கு கிடைக்கும் பொருட்களின் அளவு: பதனீர் 180 லிட்டர், பனைவெல்லம் 25 கிலோ,பனஞ்சர்க்கரை எனப்படும் நாட்டுசர்க்கரை 16 கிலோ, தும்பு, 11.4 கிலோ, ஈக்கு 2.25 கிலோ,விறகு 10 கிலோ, ஓலை 10 கிலோ, நார் 20 கிலோ, மேலும்இம்மரம் இயற் கையின்இடிதாங்கியாகும்.
பொதுவாக கிராமங்களுக்கு வெளி யேதான் அதிகஅளவு பனங்காடு இருக்கும். இவை இடியை, ஈர்த்து தன்னுள் கிரகிக்கும் சக்தி உள்ளதாக காலங்காலமாக நம்பப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பனை மரங்களை வெட்டுவதை அரசுதடை செய்ய வேண்டும் என்றனர்.
பனை மரத்தின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் குமரி அனந்தன் தொடங்கி, பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, கள் இயக்க ஒருங் கிணைப்பாளர் நல்லச்சாமி பனை மரங்களைப் பாதுகாக்க நடைப் பயணம், செயல் திட்ட விளக்கம் என தீவிரமாக செயலாற்றி வருகிறார்.
இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் பலரும் அண்மைக்காலமாக பனை விதைகளை தங்கள் கிராமப் பகுதிகளில் ஏரிக் கரையோரம் நட்டு வருகின்றனர். இந்த தருணத்தில் ஏற்கெனவே இருக்கும் பனை மரங்களை காக்க அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
“சந்தன மரம்,தேக்கு மரம் ஆகியவற்றுக்கு இணையாக பாதுகாக்கப்பட வேண்டிய வகையாக பனைமரத்தை அறிவித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவின் அனுமதி பெற்றால்தான் அதைவெட்ட முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்; இதற்காக சட்டப் பேரவையில்புதியசட்டம் நிறைவேற்ற வேண்டும்” என கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு டாக்டர்ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது இங்கு நினைவு கூறத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT