Last Updated : 18 Apr, 2021 03:19 AM

 

Published : 18 Apr 2021 03:19 AM
Last Updated : 18 Apr 2021 03:19 AM

சிவகங்கை மாவட்டத்தில் கிராம நூலகங்கள் மூடி கிடப்பதால் வீணாகி வரும் புத்தகங்கள்

காரைக்குடி அருகே பெரம்புவயல் ஊராட்சி சித்திவயலில் மூடிக்கிடக்கும் நூலகக் கட்டிடம்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டத்தில் கிராமங்களில் உள்ள பெரும்பாலான நூலகங்கள் பயன்பாடின்றி மூடி கிடப்பதால், கட்டிடங்கள், புத்தகங்கள் வீணாகி வருகின்றன.

தமிழக அரசு கடந்த 2006-11-ம் ஆண்டுகளில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளுக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டது. இதில் ரேஷன் கடை, நூலகம், பொதுக் கழிப்பறை கட்டுதல், விளையாட்டு மைதானம், சிமென்ட் சாலை அமைத்தல், குட்டைகள் தூர் வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

புதிய நூலக கட்டிடங்கள்

அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் பல ஊராட்சிகளில் ரூ.3.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் செலவில் நூலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. சில இடங்களில் பழைய கட்டிடத்தை புதுப்பித்து பயன்படுத்தி கொண்டனர். மேலும் நூலகத்துக்குத் தேவையான புத்தகங்கள், இருக்கைகள், மர அலமாரிகள் வாங்கப்பட்டன.

இதுதவிர போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், தினசரி நாளிதழ்கள் வாங்கப்பட்டன. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை நூலகராக நியமித்து மாத ஊதியமாக ரூ.1,000 முதல் ரூ.1,500 வழங்கினர். மேலும் பல இடங்களில் ஊரகக் கட்டிடங்கள் பராமரிப்புத் திட்டத்தில் நூலகங்கள் புதுப்பிக்கப்பட்டன. ஆனால், காலப்போக்கில் நூலகங்களை ஊராட்சித் தலைவர்கள் சுமையாகக் கருதத் தொடங்கினர். இதனால் நூலகர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்தினர். இதையடுத்து நூலகர்கள் வேறு பணிகளுக்குச் சென்று விட்டனர். ஒருசிலர் மட்டுமே தொடர்ந்து நூலகங்களை நடத்தி வருகின்றனர்.

இதனால் மாவட்டத்தில் பெரும் பாலான கிராமப்புற நூலகங்கள் மூடிக்கிடக்கின்றன. இதையடுத்து நூலகக் கட்டிடங்களும், அங்குள்ள ஆயிரக்கணக்கான புத்தகங்களும் பாழாகி வருகின்றன. மீண்டும் நூல கங்களைத் திறக்க வேண்டுமென கிராம இளைஞர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நூல கத்துக்குத் தனியாக நிதி ஒதுக்கீடு கிடையாது. அந்தந்த ஊராட்சி நிதி மூலமே நூலகம் பராமரிக்கப்பட்டு வருகிறது. சிலர் தனிக்கவனம் செலுத்தி சிறப்பாக நடத்துகின்றனர். மற்ற வர்களையும் நூலகங்களைத் திறக்க வலியுறுத்தி உள்ளோம்,’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x