Published : 15 Apr 2021 11:02 AM
Last Updated : 15 Apr 2021 11:02 AM
மேற்குவங்க மாநிலத்தில் கொண்டாடப்பட்ட வங்காள புத்தாண்டை ஒட்டி, ‘இந்து புத்தாண்டில் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்’ எனக் குறிப்பிட்டு பாஜக தலைவர் திலீப் கோஷ் வாழ்த்து கூறியுள்ளது சர்சையைக் கிளப்பியுள்ளது.
மேற்குவங்கம் உள்ளிட்ட நாடு முழுவதிலும் வாழும் வங்காள மக்கள் ’பொய்லோ பைஸாக்’ எனும் புத்தாண்டைக் கொண்டாடினர். வங்காள மக்களின் வருடப்பிறப்பான இது, அதன் முதல் மாதத்தின் முதல் நாளாகாவும் அனுசரிக்கப்படுகிறது.
வழக்கமாக இது, ஏப்ரல் 14 அல்லது 15 ஆம் தேதி என்று அமைகிறது. இந்நாளை, தமிழ்ப் புத்தாண்டைப் போல் சாதி, மதபேதமின்றி வங்க மக்களால் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பாகிஸ்தானிலிருந்து பிரிந்த முஸ்லிம் நாடான வங்கதேசத்தில் உள்ள வங்காளிகளும் இந்நாளைக் கொண்டாடுகின்றனர். இந்து, முஸ்லிம்கள் பேதமில்லாமல் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், வங்காளப் புத்தாண்டுக்கு வாழ்த்து என்ற பெயரில், மதரீதியாக மக்களைப் பிரிக்கப் பாஜக முயற்சித்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
மக்களவை எம்.பி.,யும், பாஜகவின் மாநிலத் தலைவருமான திலீப் கோஷ் தனது முகநூலில் இந்துக்களுக்கு வாழ்த்து எனப் பதிவிட்டதே இந்த சர்ச்சைக்கு காரணம்.
இது குறித்து பாஜக எம்.பியான திலீப் கோஷ் தன் வீடியோ பதிவில், ‘இது உலகப் படைப்பின் முதல் நாளாகும். இதில் பகவான் ராம் உள்ளிட்டப் பல உயர்ந்தவர்களும் உருவானார்கள்.
எனவே, இந்த நாள் நமக்குப் பெருமையானது. இந்த இந்து புத்தாண்டில் ஒவ்வொருவருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாழ்த்துச் செய்தி புத்தாண்டிற்கு ஒருநாள் முன்னதாகவே செவ்வாய்கிழமை முதலாகவே சமூக வலைதளங்களில் பரவத் துவங்கியது.
இதைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸார் பாஜகவை கடுமையாக விமர்சிக்கத்து வருகின்றனர். மேற்குவங்க வரலாற்று ஆய்வாளர்களும் பாஜகவின் வாழ்த்து மீது கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபோன்ற பதிவுகளின் மூலம், பாஜக இந்நாட்டின் நிரந்தர ஆட்சியாளராக விரும்புவதாகவும் அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.
இந்த கருத்துகளும், விமர்சனங்களும் பாஜகவிற்கு எதிராக சமூகவலைதளங்களில் வைரலாககி வருகிறது.
இதுபோன்ற பதிவுகளின் மூலம், பாஜக இந்நாட்டின் நிரந்தர ஆட்சியாளர் ஆக விரும்புவதாகவும் அவர்கள் கருத்து கூறியுள்ளனர். இந்த கருத்துகளும், விமர்சனங்களும் பாஜகவிற்கு எதிராக சமூகவலைதளங்களில் வைரலாகத் தொட்ங்கிவுள்ளது.
இது குறித்து திரிணமூல் காங்கிரஸின் மாநிலத் துணைத்தலைவரான சவுகதா ராய் எம்.பி கூறும்போது, ‘இது வங்காள மக்களின் திருநாள் ஆகும்.
இதன்மூலம், மக்களைப் பிரிப்பதுடன் எங்கள் கலாச்சாரத்தை ஒழிக்க தவாதிகள், எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதையே காட்டுகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க சட்டப்பேரவைக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஆளும் திரிணமூல் காங்கிரஸிடமிருந்து பாஜக ஆட்சியைப் பறிக்கும் சூழல் நிலவுகிறது.
இம்மாநிலத்தின் 295 தொகுதிகளில் சுமார் 120 இல் முஸ்லிம்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர். இதனால், பாஜக மதரீதியான அரசியலை முன்வைத்து தன் வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்வதாகவும் கருதப்படுகிறது.
இதுவரையும் நான்கு கட்ட தேர்தல் முடிந்து ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதன் முடிவுகள் தமிழகம் உள்ளிட்ட மற்ற நான்கு மாநிலங்களுக்கும் சேர்த்து மே 2 இல் வெளியாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT