Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM

கரோனாவால் பாதிக்கப்பட்ட உவரி எஸ்ஐ உயிரிழப்பு

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மட்டும் 190 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 101 பேர் திருநெல்வேலி மாநகர பகுதிகளைச் சேர்ந்தவர்கள். வட்டார அளவில் பாதிப்பு எண்ணிக்கை: அம்பாசமுத்திரம்- 17, மானூர்- 3, நாங்குநேரி- 4, பாளையங்கோட்டை- 26, பாப்பாகுடி- 2, ராதாபுரம்- 6, வள்ளியூர்- 10, சேரன்மகாதேவி- 14, களக்காடு- 7. இஸ்ரோ மையத்தில் 2 ஊழியர்களுக்கும், கல்லிடைக் குறிச்சியில் ஒரே தெருவில் 3 பேருக்கும், மற்றொரு தெரு வில் 2 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது.

எஸ்ஐ உயிரிழப்பு

உவரி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கார்லூஸ் (57). கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளையைச் சேர்ந்த இவர், கூடங்குளத்தில் வசித்து வந்தார். கடந்த 1986-ல் காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர், 2019-ல் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். காய்ச்சல் ஏற்பட்டதால் நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் 16-ம் தேதி அனுமதி க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுபோல் திருநெல்வேலி மாநகர பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலர் அரசகுமார் , சுகாதார ஆய்வா ளர் நடராஜன் தலைமையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலை, உழவர் சந்தை பகுதிகளில் பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
இதுபோல் கரோனா தடுப்பூசி குறித்து மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத் தும் வாகன பயணத்தை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் பெருமாள்புரம் காவல் நிலையத்திலிருந்து தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவமனைகள் தவிர கல்லூரி, பள்ளிகள் கரோனா சிகிச்சைக்கான சிறப்பு மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் 600 படுக்கை வசதிகள் தயார் நிலை யில் உள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி நோயாளி களுக்கு கிடைக்கும் வகையில், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மட்டும் புதிதாக 88 பேர் கரோனாவினால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 17,850 பேரு க்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் தென்காசி ஒன்றியத்தில் 19 பேர், சங்கரன்கோவில் ஒன்றியத்தில் 24 பேர், ஆலங்குளம் ஒன்றியத்தில் 2 பேர், கடையம் ஒன்றியத்தில் 2 பேர், கீழப் பாவூர் ஒன்றியத்தில் 11 பேர், குருவிகுளம் ஒன்றியத்தில் 2 பேர், கடையநல்லூர் ஒன்றியத் தில் 4 பேர், செங்கோட்டை ஒன்றியத்தில் 7 பேர், வாசுதேவ நல்லூர் ஒன்றியத்தில் 2 பேர் என, 73 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தூத்துக்குடி

செல்போன் கடைக்கு சீல் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் செல்போன் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு வந்த சின்னத்திரை நடிகரை பார்க்க கூட்டம் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியும் கேள்விக்குறியானது. இதையடுத்து அங்கிருந்த போலீஸார் கூட்டத்தை கலைந்துபோகச் செய்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான குழுவினர் அங்குவந்து, கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக செல்போன் கடைக்கு சீல் வைத்து, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மாவட்டத்தில் தினசரி கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 936 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செல்போன் கடைக்கு சீல்

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் செல்போன் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு வந்த சின்னத்திரை நடிகரை பார்க்க கூட்டம் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியும் கேள்விக்குறியானது. இதையடுத்து அங்கிருந்த போலீஸார் கூட்டத்தை கலைந்துபோகச் செய்தனர். திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான குழுவினர் அங்குவந்து, கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக செல்போன் கடைக்கு சீல் வைத்து, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x