Last Updated : 12 Dec, 2015 03:52 PM

 

Published : 12 Dec 2015 03:52 PM
Last Updated : 12 Dec 2015 03:52 PM

மழையால் உடுமலை பள்ளிக் கட்டிடம் சேதம்: மைதானத்தில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்

உடுமலை அருகே மழையால் பள்ளிக் கட்டிடம் சேதமடைந் துள்ளதால், மைதானத்தில் அமர்ந்து படிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மடத்துக்குளத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குருவக்களம் கிராமத்தில், அங்குள்ள குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக 1990-ம் ஆண்டு இரு வகுப்பறைகளுடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது, இங்கு 50 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமையாசிரியர் மற்றும் ஓர் உதவி ஆசிரியர் பணிபுரிகின்றனர்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பெய்துவரும் மழையால் பள்ளியின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. அதன் வழியாக வகுப்பறைக்குள் மழை நீர் வழிந்தோடும் நிலை உள்ளது. சுவர்களில் ஏற்பட்ட நீர் கசிவால், மேற்கூரைகள் பெயர்ந்து விழுகின்றன. மாணவர்களின் உயிருக்கு ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.

வகுப்பறைக்குள் இருந்த பதிவேடுகள், ஆவணங்கள், புத்தகங்கள் மழை நீரால் சேதமாகியுள்ளன. கடந்த சில நாட்களாக மைதானத்திலும், மர நிழலிலும் அமர்ந்து மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

பள்ளித் தலைமையாசிரியர் ராபர்ட் கூறும்போது, “வடகிழக்கு பருவ மழை தொடங்கிய பின்பு தான், இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x