Published : 29 Mar 2014 09:59 AM
Last Updated : 29 Mar 2014 09:59 AM

6 தொகுதிகளில் அதிமுக.வுக்கு நெருக்கடி

“நாற்பதும் நமதே.. நாடும் நமதே’ என முழக்கமிட்டுவரும் அதிமுக.வில், தென் மாவட்டங்களில் உள்ள 6 தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்கள் கடும் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் வேட்பாளர் அன்வர் ராஜாவுக்கு எதிராக அந்தக் கட்சி யில் உள்ள முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் சிலரே அவருக்கு எதிராக வேலை செய்துவருகின்ற னர். எதிர்த்து நிற்கும் திமுக வேட் பாளரான கல்லூரி அதிபர் ஜலீல் பணத்தை தண்ணீராக செலவழிப்ப தால் திமுக வட்டாரம் உற்சாகம் குறையாமல் ஓடிக் கொண்டிருக் கிறது. அன்வர் ராஜாவோ 11 யூனியனுக்கும் தலா ஐம்பதாயிரம் கொடுத்ததோடு நிற்கிறார். ’இது வெள்ளையடிக்கவே பத்தாதே’ என்று பதறுகிறது அதிமுக. போதாக் குறைக்கு, முக்குலத்தோர் ஓட்டு களில் ஒரு பகுதி பழைய பாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் பக்கம் திரும்ப வாய்ப்பிருப்பதால் அரசரும் அன்வர் ராஜாவின் எம்.பி. கனவை கலைத்துக் கொண்டிருக்கிறார்

சிவகங்கை

சிவங்கை அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்களுக்கு தாராளமாய் நிதி கொடுக்கிறார். ஆனால், அது கட்சியின் அடிநாத மாக உள்ள தொண்டனுக்குப் போய் சேரவில்லை. கடந்த முறை 3,354 ஓட்டில் ப.சிதம்பரத்திடம் தோற் றுப்போன ராஜகண்ணப்பனுக்கு இந்தமுறை அதிமுக-வில் வாய்ப் பளிக்கப்படாததால், ‘அதிமுக-வுக்கு பாடம் புகட்டுவோம்’ என யாதவர்குல பிரபலங்கள் சூளுரைப்பதும் செந்தில்நாதனுக்கு சிக்கல்தான்.

விருதுநகர்

விருதுநகர் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சிபாரிசு. இவரை சிவகாசியைத் தாண்டி யாருக்கும் தெரியவில்லை. ராதா கிருஷ்ணனுக்கு தலைவலியே உட் கட்சி பூசல்கள்தான். அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் உதயகுமா ருக்கும் ஒத்துப்போகவில்லை. அமைச்சர் பதவியைப் பறி கொடுத்த வைகைச்செல்வனும் உதயகுமார் பக்கம் நிற்பதாலும் அனைத்து சமுதாயத்தினரும் விரும்பும் நட்சத்திர வேட்பாளராக வைகோ களத்தில் நிற்பதாலும் ராதாகிருஷ்ணன் ரங்கராட்டினம் ஆடிக் கொண்டிருக்கிறார்.

மதுரை

மதுரை அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன். அமைச்சர் செல்லூர் ராஜுவின் சிபாரிசு. முக்குலத்தோர் தொகுதியில் யாத வரை எப்படி நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை. கோபால கிருஷ்ணன் மதுரை துணை மேயராக இருந்தவர்.

மதுரை நகருக்குள் தறிகெட்டு ஆடும் தண்ணீர் பிரச் சினையே இவருக்கு எதிராக அமைந்துவிடும் போலிருக்கிறது. வசதிக்காரர் என்பதால் கோபால கிருஷ்ணன் தாராளமாய் பணம் செலவிடுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது அதிமுக.

திண்டுக்கல்

திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் உதயகுமார். அமைச்சர் நத்தம் விசுவநாதன் தனது மைத்துனர் கண்ணனுக்கு திண்டுக்கல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை என்பதாலோ என்னவோ பிரச்சாரத்தில் பட்டும் படாமல் நிற்கிறார். ‘நான் நாற்பது தொகுதிக்கும் போகவேண்டி இருப் பதால் என்னை எதிர்பார்க்காதீர் கள். நீங்கள்தான் வேலை பார்த்து உதயகுமாரை ஜெயிக்க வைக்க வேண்டும்’ என்று கட்சியினரிடம் சொல்லி விட்டாராம் விசுவநாதன். திமுக தரப்பில் ஐ.பெரியசாமியும் அவரது ஆதரவாளர்களும் வெறித் தனமான வேலை பார்ப்பதும் உதய குமாரின் உறக்கத்துக்கு உலை வைத்துக் கொண்டிருக்கிறது.

தேனி

தேனி அதிமுக வேட்பாளர் பார்த்திபன். இவரது வெற்றியில் தனது கவுரமும் அடங்கி இருக்கிறது என்பதால் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது படை பராக்கிரமங்கள் அனைத்தையும் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார். தனது சாதிக்காரர் என்பதால் தங்கத் தமிழ்ச் செல்வனும், ‘பார்த்திபனை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்போம்’ என்று சொல்லி மெனக்கெடுகிறார் ஆனால், திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தின் தேர்தல் தந்திர வித்தைகளுக்கு முன்னால் பார்த்திபன் தாக்குப்பிடிப்பாரா என் பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x