Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM
விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகிறது.
கரோனா தொற்றால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன. இந்நிலையில் விழுப்புரத்திலிருந்து நேற்று புறப்பட்ட அரசு பேருந்துகளில் முகக்கவசம் அணிந்த பயணிகளை மட்டுமே ஊழியர்கள் அனுமதித்தனர். தனியார் பேருந்துகளில் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்தவர்களை டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான போலீஸார் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத் தனர்.
வழக்கமாக பரபரப்பாக காணப் படும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 25 சதவீத பயணிகளே பேருந்துக்காக காத்திருந்தனர். புதுச்சேரி தவிர மற்ற ஊர்களுக்கு சென்றபேருந்துகள் பயணிகள் இன்றி காலியாகவே புறப்பட்டு சென்றன. ஓட்டல் களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமரும் வகையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தன. இருசக்கர வாகனங்களில் முகக்கவசம் இல்லாமல் பயணித்தவர்களுக்கு காவல் துறை யினர் அபராதம் விதித்தனர். இரவு 10 மேல் கடைகளை அடைக்குமாறு வணிகர்களை காவல்துறையினர் கேட் டுக்கொண்டனர்.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் பேருந்தில் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆட்டோக்களில் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்கிறார்களா என மாவட்ட நிர்வாகத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்கு களிலும் முககவசம் அணிந்து செல்ப வர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையால் கடைகளில் முகக்கவசத்தின் விலை உயர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சிலர் இதனை பற்றி கவலைப்படாமல் இருந்து வரு கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT