Published : 10 Apr 2021 03:14 AM
Last Updated : 10 Apr 2021 03:14 AM
மதுரையிலிருந்து விருதுநகர் வழியாக நாகர்கோவில் வரை இருவழி ரயில் பாதை அமைக் கும் பணிகள் துரிதமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. பாலப் பணிகள் முடிக்கப்பட்டு தற் போது தண்டவாளம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்னை, திருச்சி, மதுரை, விரு துநகர், நெல்லை, நாகர்கோவில் வழித்தடத்தில் நாளொன்றுக்கு 60 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில் சென்னையிலிருந்து மதுரை வரை இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட்டு விட்டது. ஆனால் மதுரையிலிருந்து நாகர் கோவில் வரை ஒற்றை ரயில் பாதை மட்டுமே உள்ளது.
மதுரையிலிருந்து தென் மாவட் டங்கள் மற்றும் கேரளத்தை இணைக்கும் வகையில் இந்த ரயில் பாதை மட்டுமே உள்ளதால் பல நேரங்களில் விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் கூட கிராசிங்குகளில் நிறுத்தப்பட்டு தாமதமாக செல்லும் நிலை உள் ளது. இதனால் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மதுரையில் இருந்து வாஞ்சி மணி யாச்சி, வாஞ்சிமணியாச்சியில் இருந்து நாகர்கோவில், நாக ர்கோவிலில் இருந்து திருவனந் தபுரம் என 3 பிரிவுகளாக இருவழி ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.
இப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங் கப்பட்டன. இதற்காக ரூ.2,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2021–ம் ஆண்டுக்குள் இருவழி ரயில்பாதை திட்டப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், நிலம் கையகப் படுத்துவதில் தாமதம், கரோனா ஊரடங்கு உள்ளிட்ட கார ணங்களால் திட்டமிட்டபடி பணி களை மேற் கொள்ள முடியவில்லை. மிகவும் தாமதமாக பணிகள் நடந்தன. இந்நிலையில், தற்போது இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக இந்த ரயில் பாதையில் பாலங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது ரயில் தடத்துக்கான தண்டவாளங்கள் பொருத்தும் பணிகளும், மின்சார ரயில்களை இயக்குவதற்கான மின் கம்பிகள் அமைக்கும் பணிகளும் விறு விறுப்பாக நடைபெறுகின்றன.
இதுகுறித்து ரயில்வே துறை அலுவலர்கள் கூறுகையில், "திட்டம் தொடங்கப்பட்டபோது நிலம் கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் அப்ப ணிகள் விரைவாக முடிக்கப்பட்டு தேவையான இடங்களில் பாலங் கள் கட்டப்பட்டுள்ளன.
தற்போது இரண்டாவது வழித் தடம் அமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடிப்பதற்கான முயற்சியை மேற் கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT