Published : 03 Dec 2015 08:58 PM
Last Updated : 03 Dec 2015 08:58 PM
கோட்டூர்புரம் மக்களை மீட்பதில் எந்த பின்னடைவும், தொய்வும் இல்லாமல் மீட்புக் குழுவினர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்த கனமழையால் மாநகரம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும், பல இடங்களில் வெள்ளம் தேங்கியிருப்பதாலும் போக்குவரத்து முழுமையாக இயக்கப்படவில்லை. சில இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கோட்டூர்புரமும் ஒன்று. கோட்டூர்புரத்தில் மட்டும் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான மக்களை இன்று மீட்புக் குழுவினர் படகுகள் மூலமாகவும், கயிறுகள் கொண்டும் மீட்டுள்ளனர்.
கோட்டூர்புரம் மக்களை மீட்பதில் எந்த பின்னடைவும், தொய்வும் இல்லாமல் மீட்புக் குழுவினர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை உணர்த்தும் சிறப்பு புகைப்படங்கள்.
இந்த தன்னார்வலரின் அர்ப்பணிப்பைப் பார்த்து ஆச்சரியப்படாதவர்களே இல்லை. தரையிலும், தண்ணீரிலும் பயன்படுத்துவதற்கு வசதியாக இந்த வாகனத்தை தானே வடிவமைத்திருக்கிறார். இரவு நேரத்தில் மக்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வாகனத்தின் முகப்பில் விளக்குகளைப் பொருத்தி இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT