Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை மாவட்ட நிர்வாகங்கள் இறுதிப் பட்டியல்களாக வெளியிட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு விவரங்களை கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் நேற்று முன்தினம் இரவு வெளியிட் டது. இதுகுறித்த விவரம் வருமாறு:
உளுந்தூர்பேட்டை தொகுதியில் 2,93,362 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,21,130 ஆண்கள், 1,20,834 பெண்கள், 1 திருநங்கை என மொத்தம் 2,41,965 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தம் 82.48 சதவீதம் வாக்காளர்கள் வாக் களித்துள்ளனர்.
ரிஷிவந்தியம் தொகுதியில் 2,68,231 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,07,991 ஆண்கள், 1,05,633 பெண்கள் 5 திருநங்கைகள் என மொத்தம் 2 ,13, 629 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தம் 79.64 சதவீதம் வாக்களித்துள்ளனர்.
சங்கராபுரம் தொகுதியில் 2 ,68, 535 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,03,894 ஆண்கள், 1,09 ,341 பெண்கள் 2 திருநங்கைகள் உட்பட 2 ,13,237 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தம் 79.41 சதவீதம் வாக்களித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் 2,86,578 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,09,115 ஆண்கள், 1,15,343 பெண்கள், 33 திருநங்கைகள் என மொத்தம் 2,24, 491 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தம் 78.34 சதவீதம் வாக்களித்துள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 11,16,706 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4,42,130 ஆண்கள்,4,51,151 பெண்கள், 41 திருநங்கைகள் என மொத்தம் 8,93 322 பேர் வாக்களித்துள்ளனர். மாவட்டத்தில் 80 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, புவனகிரி, விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி (தனி), காட்டுமன்னார்கோவில் (தனி) என 9 சட்டப்பேரவை தொகுதி களுக்கான வாக்குப்பதிவு விவரங்களை கடலூர் ஆட்சியர் அலுவலகம் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.
அதுகுறித்த விவரம் பின்வருமாறு:
கடலூர் தொகுதியில் 2,39,372 வாக் காளர்கள் உள்ளனர். இவர்களில் 86,845 ஆண்கள், 92,112 பெண்கள், 28 திருநங்கை என மொத்தம் 1,78,985 வாக்காளர்கள் வாக்களித்துளளனர். மொத்தம் 74.77 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித் துள்ளனர்.
சிதம்பரம் தொகுதியில் 2,50,998 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 87,840 ஆண்கள், 92,707 பெண்கள், 1 திருநங்கை என மொத்தம் 1,80,548 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் 71.93 சதவீதம் வாக்காளர்கள் வாக்க ளித்துள்ளனர்.
குறிஞ்சிப்பாடி தொகுதியில் 2,43,164 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 98,461 ஆண்கள், 1,01083 பெண்கள், 5 திருநங்கைகள் உட்பட 1,99,549 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் 82.06 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித் துள்ளனர்.
நெய்வேலி தொகுதியில் 2,18,603 வாக்காளர்கள் உள்ளனர். இவர்க ளில் 81,974 ஆண்கள், 80,334 பெண்கள், 3 திருநங்கைகள் என மொத்தம் 1,62,311 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் 74.25 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
புவனகிரி தொகுதியில் 2,48,517 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 97,052ஆண்கள், 98,181 பெண்கள், 7 திருநங்கைகள் உட்பட 1,95,052 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் 78.57 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
விருத்தாசலம் தொகுதியில் 2,52,844 வாக்காளர்கள் உள்ளனர்.இவர்களில் 94,797 ஆண்கள், 99,930பெண்கள், 15 திருநங்கைகள் உட்பட1,94,742 வாக்காளர்கள் வாக்களித்துள் ளனர். மொத்தம் 77.02 சதவீதம் வாக்கா ளர்கள் வாக்களித்துள்ளனர்.
பண்ருட்டி தொகுதியில் 2,45,451 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 95,387ஆண்கள், 99,986 பெண்கள், 25 திருநங்கைகள் உட்பட 1,95,398 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் 79.61 சத வீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
திட்டக்குடி (தனி) தொகுதியில் 2,19,390 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 77,560 ஆண்கள், 89,828 பெண்கள், 1 திருநங்கைகள் உட்பட 1,67,389 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.மொத்தம்76.30 சதவீதம் வாக்காளர்கள் வாக்க ளித்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் 2,28,956 வாக் காளர்கள் உள்ளனர். இவர்களில் 85,499, ஆண்கள்,88,738 பெண்கள், 3 திருநங்கைகள் உட்பட 1,74,042 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் 76.10 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 21,47295 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 8,05,415 ஆண்கள்,8,42,909 பெண்கள், 88 திருநங்கைகள் என மொத்தம் 16,48,412 வாக்காளர்கள் வாக்களித் துள்ளனர். மாவட்டத்தில் 76.77 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி) விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குப்பதிவு விவரங்களை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் நேற்று முன் தினம் இரவு வெளியிட்டது.
அதுகுறித்த விவரம் வருமாறு:
செஞ்சி தொகுதியில் 2,60,788 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,28,835 ஆண் வாக்காளர்கள், 1,31,916 பெண் வாக்காளர்கள், 37 திருநங்கைகள் உள்ளனர். இதில் தலா 1,02,236 ஆண் மற்றும் பெண் வாக்காளர்களும் (அதாவது ஆண், பெண் வாக்காளர்கள் சரிசம மாக வாக்களித்துள்ளனர்), 13 திருநங் கைகள் என மொத்தம் 2,04,485 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் 78.41 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித் துள்ளனர்.
மயிலம் தொகுதியில் 2,60,788 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,09,919ஆண் வாக்காளர்களும், 1,10,292 பெண் வாக்காளர்களும், 25 திருநங்கைகள் உள்ளனர். இத்தேர்தலில் 88,815 ஆண்வாக்காளர்களும், 86,367 பெண் வாக்காளர்களும், ஒரு திருநங்கை என மொத்தம் 1,75,183 வாக்காளர்கள் வாக்களித் துள்ளனர். மொத்தம் 79.54 சதவீதம் வாக் காளர்கள் வாக்களித்துள்ளனர்.
திண்டிவனம் (தனி) தொகுதியில் 2,30,527 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,13,592 ஆண் வாக்காளர்கள், 1,16,922 பெண் வாக்காளர்கள்,13 திருநங்கைகள் உள்ளனர். இத்தேர்தலில் 90,672 ஆண் வாக்காளர்களும், 90,135பெண் வாக்காளர்கள்,2 திருநங்கைகள் என மொத்தம் 1,80,809 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் 78.43 சத வீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
வானூர் (தனி) தொகுதியில் 2,26,539 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,11,236 ஆண் வாக்காளர்கள், 1,15,287 பெண் வாக்காளர்கள்,16 திருநங்கைகள் உள்ளனர். இத்தேர்தலில் 89,820 ஆண் வாக்காளர்களும், 90,944 பெண் வாக்காளர்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 1,80,766 வாக்காளர்கள் வாக்க ளித்துள்ளனர். மொத்தம் 79.79 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
விழுப்புரம் தொகுதியில் 2,62,068 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,27,913 ஆண் வாக்காளர்கள், 1,34,092 பெண் வாக்காளர்கள்,63 திருநங்கைகள் உள்ளனர். இத்தேர்தலில் 1,00,242 ஆண் வாக்காளர்கள், 1,01,481 பெண் வாக்காளர்கள், 3 திருநங்கைகள் என மொத்தம் 2,01,726 வாக்காளர்கள் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத் தம் 76.97 சதவீதம் வாக்காளர்கள் வாக் களித்துள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் 2,34,624 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,15,903 ஆண் வாக்காளர்களும்,1,18,696 பெண் வாக்காளர்களும், 25 திருநங் கைகள் உள்ளனர். இத்தேர்தலில் 95,318ஆண் வாக்காளர்கள், 95,646 பெண் வாக்காளர்கள், 3 திருநங்கைகள் என மொத்தம் 1,90,967 வாக்காளர்கள் வாக்க ளித்துள்ளனர். மொத்தம் 81.39 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
திருக்கோவிலூர் தொகுதியில் 2,54,313 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,27,766 ஆண் வாக்காளர்களும், 1,26,511பெண் வாக்காளர்களும், 36 திருநங்கை கள் உள்ளனர்.
இத்தேர்தலில் 98,151 ஆண் வாக்காளர்கள், 95,806 பெண் வாக்காளர்கள்,11 திருநங்கைகள் என மொத்தம்1,93,968 வாக்காளர்கள் வாக்களித்துள் ளனர். மொத்தம் 76.27 சதவீதம் வாக் காளர்கள் வாக்களித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள 7 தொகுதிகளில் 16,89,095 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 8,35,164 ஆண் வாக்காளர்களும், 8,53,716 பெண் வாக்காளர்களும், 215 திருநங்கைகள் உள்ளனர். இத்தேர்தலில் 6,65,254 ஆண் வாக்காளர்கள், 6,62,615 பெண் வாக்காளர் கள்,35 திருநங்கைகள் என மொத்தம் 13,27,904 வாக்காளர்கள் என 78.62 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட கூடுதலாக 2,639 பெண் வாக்காளர் கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT