Last Updated : 06 Apr, 2021 02:23 PM

 

Published : 06 Apr 2021 02:23 PM
Last Updated : 06 Apr 2021 02:23 PM

திருச்சி மாவட்டத்தில் பிற்பகல் 1 மணி நிலவரம்; 41.83 சதவீதம் வாக்குகள் பதிவு

பிரதிநிதித்துவப் படம்

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 41.83 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்.06) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பாதுகாப்புப் பணியில், 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி, 39.61% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், திருச்சி மாவட்டத்தில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 41.83 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 தொகுதிகள் உள்ளன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக பிற்பகல் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதம்:

மணப்பாறை - 38.89, ஸ்ரீரங்கம் - 42.02, திருச்சி மேற்கு - 39.03, திருச்சி கிழக்கு - 38.50, திருவெறும்பூர் - 43.46, லால்குடி - 44, மண்ணச்சநல்லூர் - 45.16, முசிறி - 44.33, துறையூர் - 41.82.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x