Published : 06 Apr 2021 03:14 AM
Last Updated : 06 Apr 2021 03:14 AM
தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் இன்று ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 330 பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய பாது காப்புப் படையினர் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, இரவு 7 மணி வரை நடக்கிறது.
புதுச்சேரி மாநிலத்துக்குட்பட்ட புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந் தியங்களிலும் மொத்தம் 4 லட்சத்து 72,341 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 31,383 பெண் வாக்காளர்கள் இதர பிரிவினர் 116 பேர் உட்பட 10 லட்சத்து 4,507 வாக்காளர்கள் உள்ளனர்.
மாநிலம் முழுவதும் 100 சதவீதம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 635 இடங்களில் 1,558 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன. இதில் 952 பிரதான வாக்குச் சாவடிகளும், 606 துணை வாக்குச்சாவடிகளும் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் முற் றிலும் பெண்களால் இயங்கும் ஒரு வாக்குச் சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 12,693 பேர் தபால் மூலம் வாக் களித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக் காக 1,558 கட்டுப்பாட்டு கருவி, 1,677 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,558 விவிபாட் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. 6,835 பேர் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில போலீஸார் 2,420 பேர், ஐஆர்பிஎன் போலீஸார் 901 பேர், கர்நாடகாவிலிருந்து வர வழைக்கப்பட்ட 100 பேர் உட்பட 49 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் 1,490 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் தினமான இன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு கையுறை வழங்கப்படும்.
புதுச்சேரியில் 278, காரைக்காலில் 30, மாகே 8, ஏனாமில் 14 என 330 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஏனாமில் 16 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் ‘வெப் கேமரா’ பொருத் தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
தயார் நிலையில் கேரளா
கேரளாவில் சட்டப்பேரவையின் மொத்த முள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 2 கோடியே 74 லட்சத்து 46 ஆயிரத்து 39 பேர் வாக்களிக்க உள்ளனர். முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக என தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. மூன்று தேசிய கட்சிகளின் தலைவர்களும் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்தனர்.
மும்முனைப் போட்டி இருந்தாலும் இடதுசாரி முன்னணி, காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே முக்கிய போட்டி நிலவுகிறது. சபரிமலை விவகாரம், கரோனா தொற்றை இடதுசாரி அரசு கையாண்டவிதம் ஆகிய பிரச்சினைகள் தேர்தலில் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. தேர்தலை முன்னிட்டு கேரளா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT