Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
மதுரை மாவட்டத்தில் வாகனச் சோதனை செய்தும் தொகுதியில் அரசியல் கட்சியி னரைக் கண்காணித்தும் அனைத்துத் தொகு திகளிலும் பணப் பட்டுவாடா அமோகமாக நடந்து முடிந்தது.
தமிழகத்தில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கவும், முறையற்ற வர்த்தகப் பரிமாற்றங்களைக் கண்காணிப் பதற்காகவும் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு, வேட்பாளர்கள் அனைத்துச் செலவினங்களையும் வீடியோ ஆய்வு செய்யும் குழு போன்ற தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் கடந்த ஒரு மாதமாக தொகுதிகளில் முகாமிட்டுக் கண் காணித்தனர்.
இதில், பறக்கும் படைக் குழுவினர் சாலை களில் செல்லும் கார்கள், சரக்கு லாரிகள், மினி லாரிகளை சோதனை செய்து, பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொண்டு வருகிறார்களா? என்று ஆய்வு செய்தனர். வாகனங்களையும் பெயரளவுக்கே அவர்கள் சோதனை செய்தனர். முழுமையாக சோதனை செய்யவில்லை.
பஸ்களையும் சோதனை செய்யவில்லை. இரு சக்கர வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்யவில்லை.
சந்தேகத்துக்கிடமான இரு சக்கர வாகனங்களை மட்டும் சோதனை செய்தனர். அதனால், அரசியல் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்தை மீறி எளிதாக ஒவ்வொரு தொகுதிக்கும் பணத்தைக் கடத்தினர். பூத் வாரியாக கட்சியினருக்குச் சென்ற பணம், கடைசியாக அவர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று ஒப்படைக்கப்பட்டது.
பணம் கடத்தலையும், பணம் பட்டுவாடா வையும் மதுரை மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்புக்குழுவினரால் தடுக்க முடியாததால், கடந்த 2 நாட்களாக முழு மையாக பணப் பட்டுவாடா அமோகமாக நடந்து முடிந்தது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மத்தியத் தொகுதியைத் தவிர, மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் ரூ.500 முதல் ரூ.1000 வரை வாக்காளர்களுக்கு அந்தந்த வேட்பாளர்களைப் பொருத்து முக்கிய அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்ததாகக் கூறப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் சில தொகுதிகளில் ரூ.500 கொடுத்த வேட்பாளர்கள், மீண்டும் பணம் தருவதாக உறுதி அளித்து டோக்கனும் விநியோகித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT