

விருத்தாசலம் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல அமர்த்தப்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு பேட்டா கொடுக்கவில்லை எனக் கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவவை முன்னிட்டு விருத்தாசலம் தொகுதியில் உள்ள 355 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல 90 சிறிய ரக சரக்கு வாகனங்கள் தேர்தல் ஆணையத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்டன.
அந்த வாகன ஓட்டிகள் விருத்தாசலத்தில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்கில் வாகனத்தை நிறுத்திவிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த தேர்தல் அலுவலர்கள் அவர்களிடம் சென்று கேட்டபோது எங்களுக்கு வழங்கவேண்டிய தினப்படி ரூ.1400 கொடுத்தால் தான் வாகனத்தை எடுப்போம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார், அவர்களிடம் பேச்சுவார்த்தை உடனடியாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்து, எஞ்சிய தொகையை நாளை வழங்குவதாகக் கூறியதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வாகனத்தை இயக்கிச் சென்றனர்.