Published : 05 Apr 2021 10:13 AM
Last Updated : 05 Apr 2021 10:13 AM
ஜனநாயகத் திருவிழாவை சரியான மனப்பான்மையுடன் கொண்டாட நண்பர்களும் குடும்பத்தினரும் ஒன்றுகூடுவதைத் தடுக்கக்கூடாது என்று 144 தடை உத்தரவு தொடர்பாக நீதிமன்றம் விளக்கம் கோரியதற்கு ஆட்சியர் பூர்வா கார்க் பதில் தந்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி புதுச்சேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். கட்சியினர் கோஷம் எழுப்பியப்படி செல்லவும், கூட்டமாக கூடுவதும், ஐந்நு நபர்களுக்கு மேல் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சிபிஎம் பிரதேச செயலர் ராஜாங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து இதற்கு உரிய விளக்கம் தர நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து 144 தடை உத்தரவு தொடர்பாக விளக்கம் அறித்து புதுச்சேரி ஆட்சியர் பூர்வா கார்க் அளித்துள்ள விளக்கம் விவரம், "சென்னை உயர் நீதிமன்றம் 144 தடை உத்தரவு தொடர்பாக விளக்கம் தரக் கூறியுள்ளது.
சட்டத்துக்குப் புறம்பாக கூட்டமாகக் கூடி ஒன்று சேர்ந்து செல்லவே தடை விதித்துள்ளோம். பொதுமக்களுக்கு எவ்வித தடையுமில்லை. அவர்கள் வர்த்தகம் செய்யவோ, வேலைக்குச் செல்லவோ அவர்கள் குடும்ப விழாக்கள் நடத்தவோ தடையில்லை.
வாக்களிக்கச் செல்லவும், ஜனநாயகத் திருவிழாவை சரியான மனப்பான்மையுடன் கொண்டாட நண்பர்களும் குடும்பத்தினரும் ஒன்றுகூடுவதைத் தடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம்" என்று விளக்கம் தந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT