Published : 07 Nov 2015 08:15 AM
Last Updated : 07 Nov 2015 08:15 AM
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வின் அரசியல் பயணத்துக்கும், அறப்போராட்டங்களுக்கும் அவரது தாயார் வி.மாரியம்மாள்(98) உந்து தலாக கடைசிவரை இருந்துள்ளார். விருந்தோம்பல் பண்புக்கு மாரி யம்மாள் மிகச்சிறந்த உதாரணமாய் திகழ்ந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், கலிங் கப்பட்டி அருகேயுள்ள, ஆலம நாயக்கன்பட்டியை பூர்வீகமாகக் கொண்டவர் மாரியம்மாள். கலிங் கப்பட்டி அவருக்கு புகுந்த வீடு. அடிப்படையில் விவசாய குடும்பத் தைச் சேர்ந்த மாரியம்மாள் பள்ளிக் கல்வி வரை படித்திருக்கிறார். ஆனால் அவரது ஆளுமையும், அன்பும், ஆதரிக்கும் பண்பும், விருந் தோம்பலும் அனைவரையும் கடைசி வரை ஆச்சரியப்பட வைத்தது.
வைகோ பள்ளிப் பருவத்தில் சிறந்த பேச்சாளராய் உருவெடுக்க வும், சட்டக் கல்லூரியில் பயிலும் போது அரசியலுக்கு வரவும் அவரது தாயார் மாரியம்மாள் அச்சாரமாக இருந்துள்ளார். உள்ளூர் பகுதியில் மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் பங்கேற்கவும் செய்தார் மாரியம்மாள்.
மதுவுக்கு எதிராக
கலிங்கப்பட்டியிலுள்ள டாஸ் மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த ஆக்ஸ்ட் 1-ம் தேதி பொது மக்கள் ஆவேசமாக கிளர்ந்தெ ழுந்து கடைக்கு பூட்டுபோட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாரியம்மாளும் பங்கேற்றது அனைவரையும் ஆச்ச ரியப்பட வைத்தது. முக்கியமாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உள்ளூரில் நடைபெற்ற அனைத்து போராட்டங்களிலும் மாரியம்மாள் பங்கெடுத்துள்ளார்.
கலிங்கப்பட்டியிலுள்ள வீட்டிலி ருந்து வைகோ எங்கு புறப்பட்டாலும் தனது தாயாரின் காலில் விழுந்து ஆசிபெற்றுச் செல்வது வழக்கம். முக்கியமான அரசியல் முடிவுகளை மேற்கொள்ளும்போதுகூட தாயா ரின் ஆலோசனைகளை பெறு வதற்கு வைகோ தவறுவதில்லை. அதேநேரத்தில் மகன் எடுக்கும் அரசியல் முடிவுகளில் எந்த நேரத் திலும் குறுக்கீடாக அவர் இருந்த தில்லை.
வைகோவின் வீட்டுக்கு காமராஜர், முத்துராமலிங்க தேவர், ராஜாஜி, திமுக தலைவர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஜெயலலிதா என்று தமிழகம் மற்றும் தேசிய அளவிலான கட்சி தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வந்துள்ளனர். அவர்களுக்கு விதம்விதமாய் சமைத்து பரிமாறி மாரியம்மாள் மகிழ்ந்திருக்கிறார். முதல்வர் ஜெயலலிதா இவரை தனது இன்னொரு தாயாகவும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இவரை அம்மா என்றும் அழைத்துச் சென்றதை மதிமுக நிர்வாகிகள் நினைவுபடுத்துகின்றனர்.
இவரது கைப்பக்குவத்தில் தேங் காய் சட்னி, உளுந்துப்பொடி வைத்து இட்லி சாப்பிடவே அற்புத மாக இருக்கும் என்பதை அவர் பரிமாற உண்டவர்கள் தெரிவிக்கின் றனர். தனது தாயார் சமைக்கும் நாட்டுக்கோழி குழம்பின் சுவை குறித்து தனது கட்சியினருடன் வைகோ பலமுறை பெருமைப்பட சொல்லியிருக்கிறார்.
விருந்தோம்பலுக்கு உச்சமாக 1990-களில் இலங்கையில் அந்நாட்டு அரசுக்கு எதிரான போரில் கை, கால்களை இழந்து தவித்த விடு தலைப்புலிகள் 37 பேர், கலிங்கப்பட் டியிலுள்ள வைகோவின் வீட்டில் ஓராண்டுக்குமேலாக தங்கியிருந்து சிகிச்சை பெற்றபோது, அவர்க ளுக்கு தாயாக இருந்து பராமரித் தவர் மாரியம்மாள். கை, கால் களை இழந்தவர்களுக்கு சோறூட்டி யிருக்கிறார். படுக்கையில் இருந்த வர்கள் மலஜலம் கழித்தபோது அவற்றை எடுத்து, சுத்தம் செய் யும் பணியில் தன்னை அர்ப் பணித்திருந்தார். கலிங்கப்பட்டியில் சமீபத்தில் நடைபெற்ற மதுக் கடைக்கு எதிரான போராட்டத்தின் போது வைகோ இதை நினைவு கூர்ந்து பேசியிருந்தார்.
பொடா சட்டத்தில் வேலூர் மத்திய சிறையில் வைகோ அடைக்கப்பட்டிருந்தபோது தனது முதிய வயதிலும் சிறைக்கு நேரில் சென்று மகனுக்கு ஆறுதல் தெரிவித்து, அரசியல் பயணத்தில் வரும் தடைகளை தகர்த்தெறிய ஊக்கம் அளித்திருந்தார்.
நெருக்கடி நிலை காலத்தில் சேலம் சிறையில் வைகோவைச் சந்தித்தபோது, ‘மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் நம்ம ஐயாவை விடுதலை செய்து விடுவார்களாமே? என்று தங்கள் கிராமத்து பெண்கள் சொன்னதை வைகோவிடம் மாரியம்மாள் கூறினார். ‘அதற்கு நீங்கள் என்னம்மா சொன்னீர்கள்?’ என்று வைகோ கேட்டபோது, ‘என் மகன் கொலை செய்தானா? கொள்ளை அடித்தானா? எதற்காக மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும்? அந்த அம்மா (இந்திரா காந்தி) எத்தனை ஆண்டுகள் என் மகனைச் சிறையில் அடைத்து வைத்து இருப்பார் என்று சொன் னேன்’ என்றார் மாரியம்மாள்.
இதுபோல் வைகோவின் அனைத்து அரசியல் அத்தியாயங் களிலும் மாரியம்மாளின் பங்களிப்பு இருந்துவந்துள்ளது.
ஒரே சுடுகாடு
கலிங்கப்பட்டி மக்கள் ஒற்றுமை யுடன் இருப்பதுபோல், தமிழர்க ளும் ஒற்றுமையாக இருக்க வேண் டும் என்பதுதான் மாரியம்மாளின் விருப்பமாக இருந்துள்ளது. கலிங் கப்பட்டியில் அனைத்து சாதியி னருக்கும் சுடுகாடு ஒன்று தான் என்பது ஆச்சர்யமூட்டும் அம்சம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT