Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM

விழுப்புரம் தொகுதியில் ராமதாஸ், அன்புமணி பிரச்சாரம் செய்யாதது ஏன்?

விழுப்புரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. தமிழகம் முழுவதும் பாமகநிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று அன்புமணி ராமதாஸ் அச்சரப்பாக்கத்தில் தொடங்கி செய் யாறில் நிறைவு செய்தார். இன்று அணைக்கரை பகுதியில் தொடங்கி, மயிலாடுதுறையில் நிறைவு செய்கிறார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று மாலை விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் சி.வி. சண்முகத்தை ஆதரித்து பேசுகி றார் என காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, பின் இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டது. விழுப்புரம் தொகுதியில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இரு வருமே பிரச்சாரம் செய்யவில்லை.

இது குறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது, "விழுப்புரம் தொகுதியில் இவர்கள் இருவரும் பிரச்சாரம் மேற்கொள்ள வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்று அதிமுக மற்றும் பாமக நிர்வாகிகளிடம் தெரி விக்கப்பட்டது.

இந்த தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் தங்களது பிரச்சார பயணத்திட்டங்களை மாற்றிக் கொண்டனர்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x