Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM

அமெரிக்க, ஐரோப்பா கண்டங்களிலிருந்து தனுஷ்கோடிக்கு வலசை வந்துள்ள பிளமிங்கோ பறவைகள்

நாடு கடந்து வரும் வாய்பேச முடியாத ஐந்தறிவு ஜீவன்களான பறவைகளிடம் சாதி, மத வேறுபாடு கிடையாது. ஒரே மரத்தில் பல வகைப் பறவைகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. அவற்றிடம் உள்ள ஒற்றுமையே மனிதர்கள் எப்போதும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். இடம்: தனுஷ்கோடியில் வலம் வரும் பிளமிங்கோ பறவைகள்.

ராமேசுவரம்

பல்லாயிரம் மைல் பறந்து அமெரிக்க, ஐரோ ப்பிய நாடுகளிலிருந்து தனுஷ்கோடிக்கு பிளமிங்கோ பறவைகள் வலசை (சீசன்) வரத் தொடங்கியுள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலிருந்து தமிழகத்தின் செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாகை, வேதார ண்யம், கடலூர், தனுஷ்கோடி, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அன்டீன் பிளமிங்கோ, அமெரிக்கன் பிளமிங்கோ, சைலியன் பிளமி ங்கோ, ஜாம்ஸெஸ் பிளமிங்கோ ஆகிய வகை பறவைகள் வருடந்தோறும் வலசை (சீசன்) வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் காஞ்சிரங்குடி, சித்திரங்குடி, மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் ஆகிய பகுதிகளில் பறவை சரணாலயங்கள் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரையிலும் ரஷ்யா நீர் வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, உள்ளன், அரிவாள் மூக்கன், நாரை, பாம்பு தாரா, நீர் காகங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் வலசை (சீசன்) வருகின்றன.

இந்த ஆண்டு பருவமழை கடந்த நவம்பர் முதல் வாரம் தொடங்கி ஜனவரி மாதம் இறுதி வரை ராமேசுவரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன் போன்ற கடலோரப் பகுதிகளில் பரவலாகப் பெய்ததால் குளங்களும், நீரோடைகளும் தண்ணீர் நிரம்பி உள்ளன. இந்நிலையில் ராமேசுவரம் தனுஷ்கோடி கடற்பகுதிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரம் மைல்கள் பறந்து பிளமிங்கோ பறவைகள் தற்போது வரத் தொடங்கியுள்ளன.

தனுஷ்கோடிக்கு வந்துள்ள கிரேட்டர் பிளமிங்கோ வகையைச் சேர்ந்த பறவைகள் மூன்று முதல் ஐந்து அடி உயரத்தில், இளம் சிவந்த கால்களுடன், பால் போன்ற வெண்மை நிறத்தில் உள்ளன. தனுஷ்கோடி கடற்கரைப் பகுதிகளில் சுற்றித்திரியும் பிளமிங்கோ பறவைகளை ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் ஆர்வமாகப் பார்த்து மகிழ்கின்றனர்.

தனுஷ்கோடிக்கு நூற்றாண்டு காலமாக பிளமிங்கோ பறவைகள் தவறாமல் வந்து கொண்டு இருக்கின்றன. பிளமிங்கோ பறவை களின் வருகையை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அதிர்ஷ்டமாகவும் கருதுவது குறிப்பி டத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x