Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM
விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிடும் லட்சுமணனை ஆத ரித்து நேற்று கண்டமங்கலம் அருகேசிறுவந்தாடு கிராமத்தில் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதிமோகன் பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது அவர் கூறியது:
தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சா ரம் செய்ய மோடி, அமித்ஷா வரும்போது 2 ஆயிரம், 5 ஆயிரம் ஓட்டுகள் குறையுமே தவிர வெற்றி பெற முடியாது. இன்றைக்கு நம் மீது தான் பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு கோபம் வருகிறது. அதிமுக மீது ஏன் கோபம் வருவதில்லை.
எதிரிக்கு கோபம் வந்தால், ‘நாம் வெற்றி பெறப்போகிறோம்’ என்று அர்த்தம். அதாவது, நாம் சரியான பாதையில் வெற்றிப்பாதையில் செல்கிறோம் என்று அர்த்தம்.
தி.மு.க.வை பொறுத்தவரை கடந்த கால ஆட்சியில் செய்த சாதனைத் திட்டங்களை தைரியமாக எடுத்துக்கூறி வாக்குகள் சேகரிக்கி றோம். ஆனால் அ.தி.மு.க.வினர், இனிமேல் செய்யப் போகிறோம் என்று கூறுகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அனைவருக்கும் இல வச பஸ் பாஸ் வழங்கப்படும். இதையாராலும் சிந்தித்திருக்க முடி யாது. அதுபோல் உங்கள் ஒவ் வொருவரின் வங்கி கணக்கிலும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்றுதலைவர் ஸ்டாலின் கூறியிருக் கிறார். மாணவர்களுக்கு கையடக்ககணினி இலவசமாக வழங்கப்படும்.
கரோனா காலகட்டத்தில் பசி, பட்டினியால் மக்கள் வாடினர். அப்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ. 5 ஆயிரம் வழங்குங்கள்’ என்றார். ஆனால் வெறும் ஆயிரம் ரூபாயை மட்டுமே வழங்கினர். நாம் வெற்றி பெற்றதும் ஜூன் மாதம் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளில் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
இதையெல்லாம் பார்த்தால் சி.வி.சண்முகத்திற்கு கோபம், ஆத்திரம் வரும். அவரை பற்றி விமர்சிக்கத் தேவையில்லை. கொள்ளையடித்த பணத்தை உங் களிடம் வந்து தருவார்கள். அதை வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்கள் பணம்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரச்சார நிகழ்வில் திமுக மாவட்ட துணை செயலாளர் புஷ் பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT