Published : 19 Nov 2015 10:14 AM
Last Updated : 19 Nov 2015 10:14 AM

தமிழக பாரம்பரியங்களை பாதுகாக்க மரபுசார் ஆர்வலர் குழுக்கள் அமைப்பு: தீவிர முயற்சியில் தளி அமைப்பு

நவம்பர் 19 தொடங்கி 25-ம் தேதி வரை உலக பாரம்பரிய வாரமாக ‘யுனெஸ்கோ’ அறிவித்திருக்கும் நிலையில் தமிழகத்தின் வரலாறு, தொல்லியல் மற்றும் சிற்ப கட்டிடக் கலை பற்றிய தகவல்களை திரட்ட வும் அவைகளை ஆவணப்படுத் தவும் ‘தளி’ என்ற தன்னார்வ அமைப்பு முயற்சி மேற்கொண்டுள் ளது.

ஆதித்தமிழகத்தின் வரலாறானது தொல்லியல் மற்றும் வரலாற்று தடயங்கள் மூலம் அவ்வப்போது கிடைத்துக் கொண்டே இருந்தாலும் அவற்றை முழுமையாக ஆவணப்படுத்தி பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகள் சரிவர எடுக் கப் படவில்லை. இதனால், வரலாறு என்பது பொது தளத்திலும் படித்த வர் மத்தியிலும் இன்னும்கூட அரைகுறையான புரிதலோடுதான் உள்ளது.

“கடந்த கால வரலாற்றைத் தெரிந்து கொள்ளாமல், நம் முன் னோர்களின் ஆச்சரியப்படும்படி யான கலைத்திறனை புரிந்து கொள்ளாமல், ஆயிரக்கணக்கான கல் வெட்டுகளில் உள்ள அரிய தகவல் களை தெரிந்து கொள்ளாமல் போனால் அடுத்த தலைமுறையில் நமக்கான அடையாளமும் தொலைந்து போகும்’’ என்கிறார் ‘தளி’அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் பி.ராஜசேகர்.

டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் கட்டுமானக் கலை திட்ட மேலாண் மையத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார் இவர். இதே மையத் தில் கட்டுமானக் கலை உதவி பேராசிரியராக இருக்கிறார் இவரது மனைவி வித்யாலட்சுமி. இரு வரும் சேர்ந்து மாவட்ட வாரியாக மரபுசார் ஆர்வலர் குழுக்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.

எதற்காக இந்த குழுக்கள் அமைக்கப்படுகிறது என்பது குறித்து ராஜசேகர் கூறியதாவது:

‘‘நமது முன்னோரின் வர லாற்றைச் சொல்லும் கல் வெட்டுகள் புராதன சின்னங்கள் உள்ளிட்டவை அனைத்து மாவட்டங்களிலும் உள் ளன. ஆனால், அதுகுறித்த சரியான புரிதலும் விழிப்புணர்வும் இல்லா ததால் அவற்றை எல்லாம் நாம் அசுர வேகத்தில் அழித்துக் கொண்டி ருக்கிறோம். 1910-க்கு முன்பே இந் திய தொல்லியல் துறை நமது மரபுச் சின்னங்களை ஆவணப்படுத்தத் தொடங்கிவிட்டது. அப்படி ஆவ ணப்படுத்தியதிலேயே 95 சதவீத மரபுச் சின்னங்கள் அழிந்து விட் டன.

இந்த நிலையில், எஞ்சியுள்ள அடையாளங்களையாவது நாம் பாதுகாக்க வேண்டும். அதற்காகத் தான் மரபுசார் ஆர்வலர் குழுக்களை ஏற்படுத்தி வருகிறோம். கடந்த 3 மாதத்தில் 32 மாவட்டங்களிலும் 452 பேர் மரபுசார் ஆர்வலர் குழு வில் சேர்ந்திருக்கிறார்கள். தொடக் கத்தில் முகநூல் வழியாக இவர் களை ஒருங்கிணைத்தோம். அடுத்த கட்டமாக மண்டல வாரியாக குழுக் களை ஏற்படுத்தி வருகிறோம்.

முதல்கட்டமாக கோவை, சென்னை, திருவண்ணாமலை மண் டலங்களில் குழுக்களை அமைத் திருக்கிறோம். இவர்களுக்கு மரபு சார் சின்னங்களை ஆவணப்படுத் துதல் குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டுத் துறை பேராசிரியர்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. உலக பாரம்பரிய வாரத்தின்போது மரபுசார் ஆர்வலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாண வர்களை வரலாற்றுச் சின்னங்கள் உள்ள இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு அதுகுறித்த புரிதலை ஏற்படுத்தவும் அறிவுறுத் தப்பட்டிருக்கிறார்கள்’’ என்று சொன் னார்.

தொடர்ந்து பேசிய வித்யா லட்சுமி ‘‘நமக்குக் கிடைத்திருக் கும் வரலாற்றுப் பொக்கிஷங்களைப்போல் பிற நாட்டுக்காரர்களுக்குக் கிடைத்திருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி இருப்பார்கள். ஆனால், நமக்கு அவற்றின் அருமை தெரியவில்லை; அழித்துக் கொண்டிருக்கிறோம். சிற்பக் கலை என்றால் மகாபலிபுரமும் தஞ்சையும் தான் நமக்குத் தெரிகிறது.

அவைகளைக் காட்டிலும் பிரம்மிப்பான இடங்கள் எல்லாம் தமிழகத்தில் உள்ளன. ஆனால், முறைப்படி ஆவணப்படுத்தப்படாததால் அவை வெளியில் தெரியாமல் இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஆவணப்படுத்த டாக்குமென்டரி படங்களையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். நமக்கான வரலாற்று அடையாளங்களை நாம் அடுத்த தலைமுறையிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கான ஒரு சிறு முயற்சியில் நாங்கள் இறங்கி இருக்கிறோம்’’ என்று சொன்னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x