Last Updated : 02 Apr, 2021 05:27 PM

1  

Published : 02 Apr 2021 05:27 PM
Last Updated : 02 Apr 2021 05:27 PM

ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் விநியோகம்; அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு

விழுப்புரம்

ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் விநியோகம் செய்த புகார் தொடர்பாக அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் சிவி சண்முகம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

நேற்று மாலை வண்டிமேடு, அலமேலுபுரம் லால்கான் குட்டை, மேல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்பொழுது அமைச்சரை வரவேற்று ஏராளமான பெண்கள் சாலை நிற்க வைக்கப்பட்டு ஆரத்தி எடுத்தனர்.

ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அமைச்சருடன் வந்த கட்சி பிரமுகர் கிருஷ்ணா என்பவர் தலா 100 ரூபாய் பணம் கொடுத்தார்
வாக்கு சேகரிப்பின் போது ஏராளுமானோர் வேறு பகுதியிலிருந்து அழைத்து வந்திருந்தனர்.

பணம் கொடுக்கப் பட்ட சம்பவம் வீடியோவாக சமூகவலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரணை நடத்த விழுப்புரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு, ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி வீடியோ ஆதாரங்களை கைப்பற்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ஹரிதாஸ் உத்தரவின்பேரில் பறக்கும்படை அலுவலர் சந்திரு பணம் கொடுத்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி அதிமுக நிர்வாகி கிருஷ்ணா, வேட்பாளரான அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் பெயர் தெரியாத மற்றும் சிலர் மீது விழுப்புரம் மேற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x