Published : 01 Apr 2021 04:30 PM
Last Updated : 01 Apr 2021 04:30 PM
தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இரா.முத்தரசன் இன்று (ஏப். 01) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா பெருந்தொற்று காரணமாக அரசு அறிவித்தபடி, தனியார் நடத்தும் கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டன. அவற்றில் பணியாற்றியவர்களுக்கு முழுச் சம்பளம் வழங்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், மிகப் பெரும்பாலான தனியார் கல்வி நிறுவன நிர்வாகங்களின் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு உரிய ஊதியம் தரவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. அதே நேரத்தில் மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணங்களை அந்த நிறுவனங்கள் வசூலித்தே வருகின்றன.
எனவே, தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு, தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு முழு ஊதியம் வழங்குவதற்குத் தக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது".
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT