Published : 31 Mar 2021 03:16 AM
Last Updated : 31 Mar 2021 03:16 AM

முதுகில் ஏறி சவாரி செய்ய வருகிறார்கள்; பாஜகவுடன் கூட்டணி என்பது அதிமுக, பாமக செய்த துரோகம் : சிதம்பரத்தில் திருமாவளவன் ஆவேசம்

சிதம்பரத்தில் திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மானை ஆதரித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.

கடலூர்

தமிழகத்தில் அதிமுக, பாமக முதுகில் ஏறி சவாரி செய்ய பாஜக வினர் வருகின்றனர். அவர்களுடன் கூட்டணி வைத்து தமிழக மக்க ளுக்கு இரு கட்சிகளும் துரோகம் இழைத்திருக்கின்றன என்று சிதம்பரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருமாவளவன் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் திமுக தலைமை யிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் அப்துல் ரஹ்மானுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியது:

இந்தத் தேர்தல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். கருணாநிதி, ஜெயலலிதா இல் லாத நேரத்தில் பாஜக மூக்கை நுழைத்து, தமிழகத்தில் வேரூன்ற பார்க்கிறது. அதிமுக, பாமக முதுகில் ஏறி சவாரி செய்து உள்ளே நுழைய பார்க்கிறது. தமிழ்நாட்டில் பாஜக காலூன்றக் கூடாது என்ற ஒரே நோக்கத்தோடு 6 சீட்டு என்றாலும் பரவாயில்லை என்ற தொலைநோக்கு பார்வையுடன் கூட்டணியில் கையெழுத்திட்டோம்.

பாஜக அரசியல் கட்சி அல்ல அந்த கட்சியை இயக்குவது ஆர்எஸ்எஸ் தான், ஆர்எஸ்எஸின் கொள்கைதான் பாஜகவின் கொள்கை. பாஜக மதவெறியை துண்டுகிறது. எந்த காலத்திலும் சீட்டுக்காக அதிமுக, திமுக என நாங்கள் மாறி, மாறி பேரம் பேசியது இல்லை. எங்களது நிலைப்பாடு எப்போதுமே ஒன்றாகத்தான் இருக்கும். மாற்றிக் கொள்ள மாட்டோம். தமிழக மக்களுக்கு பெரும்துரோகம் செய்துள்ளது அதிமுக வும் பாமகவும். அதிமுக, பாமகஎம்எல்ஏக்ககளை பாஜக விலைக்கு வாங்கி திமுகவுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சி யாக உட்கார திட்டம் தீட்டியுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக என்ற கட்சியே இருக்காது. இதனை பாஜக விழுங்கிவிடும். பாமகவை நீர்த்து போக செய்து விடும்.

ஓபிசி இட ஒதுக்கீட்டை என்றுமே விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்த்தது இல்லை. அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று விடுதலை சிறுத் தைகள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் ஓபிசி இட ஒதுக்கீட்டை எதிர்த்த பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது.

எம்ஜிஆர் இரட்டை இலை என்பது வேறு, ஜெயலலிதா இரட்டை இலை என்பது வேறு, எடப்பாடியின் இரட்டை இலை என்பது வேறு. இது நாளாவட்டத்தில் பாஜகவின் பின்புலத்துடன் உள்ள இரட்டைஇலை ஆகும். இவர்களுக்கு வாக்களித்தால் பாஜகவிற்கு வாக்களித்ததாக ஆகிவிடும். சமூக நீதியை காக்க இந்த தொகுதியில் திமுக கூட்டணி இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மானை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x