Published : 31 Mar 2021 03:17 AM
Last Updated : 31 Mar 2021 03:17 AM
தென்காசியில் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தென்காசி மாவட்டத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து ஆலங்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம், விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். கடையநல்லூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும். நீர்ப்பாசன வசதியை பெருக்க கடனாநதி- ராமநதி இணைக்கப்படும். தென்காசியில் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். தென்காசியில் மருத்துவக் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, குளிர்பதன கிடங்கு, மாம்பழச்சாறு தயாரிப்பு தொழிற்சாலை, கொப்பரை தேங் காய்களை காய வைக்க மின் உலர் சாதன வசதி ஏற்படுத்தப்படும்.
தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனைகள் நவீனப் படுத்தப்பட்டு, தரம் உயர்த்தப்படும். சங்கரன்கோவிலில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். தென்காசியில் பீடி தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்த இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும். ராமநதி அணை, புதுக்கால்வாய், பாசன வாய்க்கால் தூர்வாரப்படும். புளியங்குடியில் குளிர்பதன கிடங்கு, எலுமிச்சையை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை அமைக்கப்படும். செண்பகவல்லி அணை திட்டம், இரட்டைகுளம் கால்வாய் திட்டம், சேர்வலாறு- ஜம்புநதி நீர்த்தேக்க திட்டம் செயல்படுத்தப்படும். குண்டாறு அணையின் உயரத்தை கூட்டி, அதிக அளவில் நீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடையம், பாப்பாக்குடி, கீழப்பாவூர் பகுதியில் 163 கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல் படுத்தப்படும். விடுதலை போராட்ட வீரர் வெண்ணிக் காளாடி நினைவை போற்றும் வகையில் விஸ்வநாதபேரியில் சிலை அமைக்கப்படும் என்றார்.
நாகர்கோவில்
சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் முதல்வர் பழனிச்சாமி பேசும்போது, `அதிமுகவை சேர்ந்த ஒருவர் கூட சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்படாததால், குமரி மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை’ என கூறியுள்ளார். தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக குமரி மாவட்டத்தையே புறக் கணித்த முதல்வரை நீங்கள் புறக்கணிக்க வேண்டும்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஏற்கெனவே அளித்த உறுதி மொழி களையும், வாக்குறுதி களையும் நிறைவேற்றவில்லை.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். மேற்கு கடற்கரை சாலை சீரமைக்கப்படும். ஏ.வி.எம். கால்வாய் சீரமைக்கப் படும். சுற்றுலாத் தலங்கள் மேம் படுத்தப்படும். தனியார் காடுகள் சட்டவிதிகளில் நடைமுறை சிக்கல் கள் சரிசெய்யப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT