Published : 04 Nov 2015 02:56 PM
Last Updated : 04 Nov 2015 02:56 PM
கோயில்களில் பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்கள் ஆவது குறித்த 2006-ம் ஆண்டு அரசு உத்தரவு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் விரைவில் வெளியிடும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையில், ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைவர் எம்.எல். ராஜா, பிராமணர் அல்லாதோர் அர்ச்சகர்கள் ஆவதை எதிர்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
அதாவது, யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம், ஆனால் மதம், சடங்கு-சம்பிரதாயங்கள் உள்ளிட்டவைகளை அறிந்திருப்பது அவசியம். இங்கு சாதி கிடையாது என்று கூறினார் எம்.எல்.ராஜா.
இது குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் அவர் தெரிவித்த போது, அர்ச்சகராவதற்குத் தகுதி அவருக்கு 'ஆசார, அனுஷ்டானங்கள்' தெரிந்திருக்க வேண்டும் என்றார்.
“இங்கு சாதி என்ற கேள்வியே இல்லை. தமிழ்நாட்டில் கோயிலில் பிராமணரல்லாதார் அர்ச்சகராக இல்லை என்று கூற வருகிறீர்களா? மத சம்பந்தமான துறையில் அவருக்கு பரிச்சயம் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். ஆகம விதிகளின் படி கட்டிய கோயில்களுக்கும் இது பொருந்தும்” என்றார்.
2006-ம் ஆண்டு அரசு உத்தரவை எதிர்த்து அர்ச்சகர்கள் அமைப்புகள் உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்ந்துள்ளன. அதில் அர்ச்சகர்களை நியமிக்கும் முறை மதச்சார்பற்ற தன்மையில் இருக்கலாம், இதில் அரசு தலையிடலாம், ஆனால் ஒரு அர்ச்சகரின் செயல்பாடுகள் மதரீதியானது, மரபுக்கு அணுக்கமானது என்று கூறியுள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ராஜா, ராஞ்சியில் சமீபத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் மேற்கொண்ட தீர்மானங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
1951- முதல் இந்து மக்கள் தொகையில் சரிவு ஏற்பட்டுள்ளது மக்களின் பண்பாட்டு அடையாளத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என்று கூறிய ராஜா, பசு இறைச்சி சர்ச்சை குறித்து கூறும்போது, அரசியல் சாசனம் பசுப் பாதுகாப்பை வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT