Published : 30 Mar 2021 05:52 PM
Last Updated : 30 Mar 2021 05:52 PM

வாக்காளர்களுக்கு காய்ச்சல் இருந்தால் ‘டோக்கன்’ வழங்கி தனியாக வாக்களிக்க அனுமதி: தேர்தல் ஆணையம்

மதுரை

வாக்காளர்களை காய்ச்சல் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு டோக்கன் வழங்கிய வாக்குப்பதிவு முடியும் ஒரு மணி நேரத்திற்கு முன் தனியாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவுதால் வாக்குச்சாவடி மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி மையங்களில் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு நடைமுறைகளைக் குறித்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அவை வருமாறு:

அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடிமையங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். அதற்கேற்ப 6 மீட்டர் இடைவெளியில் வாக்காளர்கள் வட்டங்கள் வரைப்பட வேண்டும்.

குறைந்தப்பட்சம் 20 நபர்கள், வரிசையில் நிற்கும் வகையிலும், மற்ற வாக்காளர்கள் நிழலான பகுதியில் அமரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஹெல்ப் டெஸ்க் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகக்கசவங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

கரோனா தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஒட்டியிருக்க வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்குச்சாவடி முகவர் அல்லது வாக்குப்பதிவு அலுவலர் எவருக்கேனும் காய்ச்சல் மற்றும் வேறு அறிகுறிகள் தென்பட்டால் உடன் அவருக்கு பதில் மாற்று அலுவலரை நியமிக்க வேண்டும்.

அனைத்து வாக்காளர்களையும் வெப்பமானியைக் கொண்டு உடல் வெப்பநிலையை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது குறிப்பிட்ட வரையரை அளவிற்கு மேல் வெப்ப அளவு கண்டறியப்பட்டால் அந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு முடியும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வாக்களிக்க அறிவுறுத்த வேண்டும்.

இந்த ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் ஒருவர் நியமனம் செய்து வைத்திருக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்.

அனைத்து வாக்காளர்களுகு்கும் வாக்களிக்க வசதியாக கையுறை வழங்கப்பட வேண்டும். அடிக்கடி கிருமி நாசினி கொண்டு தூய்மைப்பணி மேற்கொள்ள வாக்குச்சாவடி மையங்களிலும் தேவையான அளவிற்கு தூய்மைப்பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.

கரோனா பாதிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் வாக்காளர்களுக்கு வாக்களிக்க எதுவாக தனி நடைமுறைகள் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x