Published : 01 Nov 2015 09:43 AM
Last Updated : 01 Nov 2015 09:43 AM
கர்நாடகாவில் உற்பத்தி குறைவால், தமிழகத்தில் பருப்புக்குப் போட்டியாக வெங்காயத்தின் விலையும் உயர்ந்து வருகிறது. அதனால் நடுத்தர, ஏழை மக்கள் வெங்காயம் வாங்க முடியாமல் திண்டாட்டம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பருப்பு விலை எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்ததால், ஏழை நடுத்தர மக்கள் பருப்பு வாங்க முடியாமல் தவித்தனர். வெளிநாடுகளில் இருந்து பருப்பு இறக்குமதி குறைந்ததாலும், வியா பாரிகள் பதுக்கியதாலும் விலை உயர்ந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், வியாபாரிகள் பதுக்கிய பருப்புகளை பறிமுதல் செய்து, கூடுதலாக இறக்குமதி செய்யப்பட்டதால் தற்போது பருப்பு விலை ஓரளவு குறைந்துள்ளது. ஆனால், இன்னமும் விலை கட்டுக்குள் வரவில்லை.
தற்போது பருப்புக்குப் போட்டி யாக, வெங்காயத்தின் விலையும் மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. தமிழகத்துக்கு உள்ளூரில் விளை விக்கப்படும் வெங்காயத்தைத் தவிர, கர்நாடக மாநிலம் பெங்க ளூரு, சோலாப்பூர், தாவணிக்கரை மற்றும் வட மாநிலங்களில் இருந் தும் வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.
தீபாவளி பண்டிகை நெருங் கும் நிலையில், முதல்தர வெங் காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. மொத்த சந்தைகளில் மட்டுமே முதல்தர வெங்காயம் கிடைக்கிறது. உள்ளூர் சந்தைகள், சில்லறைக் கடைகளில் பெரும் பாலும் அழுகல் மற்றும் இரண்டாம், மூன்றாம் தர வெங்காயமே விற் பனைக்கு வருகிறது. தட்டுப்பாடு காரணமாக மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 50, சின்ன வெங்காயம் ரூ.45 முதல் ரூ.55 வரை விற்றது.
திண்டுக்கல் வெங்காய மண்டி யில் முதல்தர பெரிய வெங்காயம் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.45. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் ரூ. 45, பெரிய வெங்காயம் ரூ. 40-க்கும் திடீரென விலை உயர்ந்துள்ளது.
சந்தைகள், சில்லறை விற் பனைக் கடைகளில் வெங்காயம் விலை, இதைவிட கூடுதலாக விற்கப்படுகிறது. மற்ற மாவட்டங் களிலும் வெங்காயம் விலை உயர்ந் துள்ளதால் நடுத்தர, ஏழை மக்கள் வாங்க முடியாமல் திண்டாட்டம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வியாபாரி சவுந்தர் ராஜன் கூறும்போது, “தமிழகத்தில் பெரிய வெங்காய மண்டியான திண்டுக்கல் வெங்காய மண்டிக்கு தற்போது 3,700 மூட்டை சின்ன வெங்காயம், 30 டாரஸ் லாரிகளில் பெரிய வெங்காயமும் வருகிறது. இங்கு திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்து மட்டும் வெங்காயம் வருகிறது. கர்நாடகாவில் இருந்து வெங்காயம் வராததால், தற்போது தமிழகத்தில் வெங்காயத்தின் தேவை அதிகரித் துள்ளது. அதனால், வெளிநாட்டு ஏற்றுமதி முற்றிலும் குறைந்துள்ளது.
ஏற்றுமதி வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்ள பெயரளவுக்கு இரண்டு கண்டெய்னர் லாரிகளில் மட்டும் இலங்கை, மலேசியாவுக்கு வெங்காயம் ஏற்றுமதியாகிறது. வழக்கமாக, தீபாவளியையொட்டி கர்நாடகாவில் இருந்து அதிகளவு வெங்காயம் தமிழகத்துக்கு வரும். இந்த ஆண்டு அம்மாநிலத்தில் போதிய மழையில்லாததால் வெங் காயம் சாகுபடியும் குறைவுதான். அறுவடை செய்த வெங்காயமும் தற்போது பெய்த மழையில் அழுகிய தால், தமிழகத்துக்கு வரத்து குறைந் தது.
இதுவே, விலை உயர்வுக்கு காரணம். வியாபாரிகள் வெங்கா யத்தை பதுக்கவில்லை என்றார்.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் தங்கவேலு கூறும்போது, “வழக் கத்தைவிட வரத்து குறைவாகத் தான் உள்ளது. வழக்கமாக பண்டிகை நாட்கள் நெருங்கினால் வெங்காய விலை உயரத்தான் செய்யும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT