Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நேற்று முன்தினம் தபால் வாக்குக் காக போலீஸாருக்கு பணம் கொடுத்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கி யுள்ளது.
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு தபால் வாக்கு செலுத்த திமுக வழக்கறிஞர் கள் மூலம் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகி யோர் உத்தரவின்பேரில் தலா 8 உதவி ஆணையர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர், தில்லை நகர், கன்டோன்மென்ட் உள்ளிட்ட 8 காவல் நிலையங்களில் சோதனை நடத்தினர்.
தலா ரூ.2 ஆயிரம்
அப்போது ஒவ்வொரு காவல ருக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ‘கவரில்’ வைத்து காவல் நிலையங் களின் ரைட்டர் (எழுத்தர்) வசம் பணத்தை ஒப்படைத்திருந்தது தெரியவந்தது. இதன்படி புத்தூர் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ரூ.46 ஆயிரம், தில்லை நகரில் ரூ.24 ஆயிரம் என மொத்தம் ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மற்ற காவல் நிலையங்களில் இப்பணம் பிரித்துக் கொடுக்கப்பட்டுவிட்டதாக கூறப் படுகிறது.
இதையடுத்து காவல் நிலைய ரைட்டர்களை வரவழைத்து ஆணையர் ஜெ.லோகநாதன் நேற்று முன்தினம் இரவு விசாரித் தார். அப்போது திமுக வழக்கறிஞர் மணிவண்ண பாரதியும், அவ ருடன் வந்த மேலும் 2 நபர்களும், மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுகவுக்கு ஆதரவாக வாக் களிக்குமாறு கூறி இந்த பணத் தைக் கொடுத்துச் சென்றதாக தில்லைநகர், அரசு மருத்துவமனை காவல் நிலைய ரைட்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து திமுக வழக்கறிஞ ரிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்ட ரைட்டர்களான சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பாலாஜி (அரசு மருத்துவமனை), தலைமை காவலர் சுகந்தி (தில்லை நகர்) மற்றும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையத்தில் நடை பெறும் செயல்களை கண்காணிக் கத் தவறியதாக ஆய்வாளர் சிவக் குமார் (தில்லை நகர்), காவல் உதவி ஆய்வாளர் ஸ்டெல்லா (அரசு மருத்துவமனை), காவல் நிலையங்களில் நடைபெற்ற சட்டத் துக்கு புறம்பான தகவல்களை தலைமை அலுவலகத்துக்கு தெரி யப்படுத்தாமல் பணியில் அலட்சிய மாக இருந்ததாக நுண்ணறிவுப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சங்கரன் (அரசு மருத்துவமனை), கலியமூர்த்தி (தில்லை நகர்) ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இதுதொடர்பாக மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக வேட்பாளர் கே.என்.நேரு சார்பில் தன்னிலை விளக்கத்துடன் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கே.என்.நேரு விடம் கேட்டபோது, ‘‘காவல் நிலையங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதற்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. திமுக வழக்கறிஞர் எனக் கூறி ஒருவர் மீது வழக்குப் போட்டுள்ளதாகக் கூறுகின்றனர். அதுபற்றி எனக்குத் தெரியாது. அவர் எதற்காக பணம் கொடுத்தார் என்பதும் எனக்குத் தெரியாது.
திருச்சி மேற்குத் தொகுதியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத் தில் நான் வெற்றி பெறப் போவது உறுதி. எனவே, எனது பெயரை மக்களிடத்தில் கெடுக்க வேண்டும் என்பதற்காக சதி செய்து, இப்படியெல்லாம் செய் கின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித் துள்ளோம்’’ என்றார்.
திமுக வழக்கறிஞர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு
தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றாமல், குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க பணம் பெற்றுக் கொண்டதாக காவல்நிலைய ரைட்டர்கள் பாலாஜி, சுகந்தி ஆகியோர் மீதும், அவர்களுக்கு பணம் அளித்ததாக திமுக வழக்கறிஞர் மணிவண்ண பாரதி உள்ளிட்ட 3 பேர் மீதும் 171 (இ), 129 (3) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் மணிவண்ண பாரதி மற்றும் அவருடன் வந்த 2 பேரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி நேற்று உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT