Published : 24 Nov 2015 09:31 AM
Last Updated : 24 Nov 2015 09:31 AM

மழை, பண்டிகை நாட்களில் போக்குவரத்து நெரிசல்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தீர்வு காண அறிவார்ந்த முறைகள் அவசியம் - வல்லுநர்கள் வலியுறுத்தல்

மத்திய அரசு அமைக்கவுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மழை மற்றும் பண்டிகை நாட்களில் ஏற்படும் கடுமையான போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் அறிவார்ந்த முறைகளை அமல்படுத்துவது அவசியம் என வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை போன்ற முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரி சல் அன்றாட பிரச்சினையாக உள் ளது. மற்ற நாட்களை விட, மழைக் காலங்களிலும், பண்டிகை நாட் களிலும் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நாடு முழுவதும் மொத்தம் 98 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாகத் தரம் உயர்த்தப்படவுள்ளன. இதற் கான பணிகள் நடைபெற்று வரு கின்றன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, தூத்துக்குடி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாகத் தரம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொதுமக்களின் முக்கிய பிரச்சினையாக கருதி, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டுமென்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி உதவி பேராசிரியர் கீதகிருஷ்ணன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அதிநவீன முறை களைக் கையாள்வது அவசியமாகி விட்டது. வளர்ந்த நாடுகளில் போக்கு வரத்துத் துறையில் அறிவார்ந்த புதிய முறைகளைப் பயன்படுத்து வதுபோல தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் பயன்படுத்த வேண்டும். முதல்கட்டமாக பொது போக்குவரத்தை அதிகரித்து, விரைவாகச் செல்ல வழி வகுக்க வேண்டும். பஸ்களுக்கு என தனி சாலைகளை அமைக்க வேண்டும்.

அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தனி கால் சென்டர் ஏற்படுத்தி, அதற்கான எண்ணை அறிவிக்க வேண்டும். அந்த எண் ணுக்குத் தொடர்பு கொண்டால் எந்தெந்த சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, அந்தச் சாலைகளில் வராமல் தவிர்க்க மக்களுக்கு வாய்ப்பு ஏற்படும்.

மேலும், அந்த எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால், போக்குவரத்து நெரிசல் தொடர்பாக பதில் எஸ்எம்எஸ் வரும் வகையிலும் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால், மக்கள் திட்டமிட்டு பயணம் செய்ய முடியும் என்றார்.

இது தொடர்பாக சென்னை போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பு செயலாளர் வி.ராமாராவ் கூறியதாவது:

போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் ரயில் போக்குவரத்து சேவை முக்கியமானதாக இருக்கிறது. எனவே, பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துகளை இணைக்க வேண்டும். சென்ட்ரல், எழும்பூர், பரங்கிமலை, விமான நிலையம், திருமங்கலம் அண்ணாநகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மெட்ரோ ரயில்களை, மின்சார ரயில்களையும் இணைத்து விரைவான ரயில் சேவை அளிக்க வேண்டும். மழைக் காலங்களில் நீர் தேங்காமல் செல்லும் வகையில் புதிய கால்வாய்களை அமைக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ளூர் மக்களிடம் கோரிக்கைகளைப் பெற்று, முக்கியமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நிறைவேற்ற முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x