Published : 28 Mar 2021 03:18 AM
Last Updated : 28 Mar 2021 03:18 AM
திருப்புல்லாணியில் 70 ஆண்டுகளாக பாழடைந்து கிடந்த வரலாற்று சிறப்புமிக்க ‘வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை சத்திரம்’ மீட்டெடுக்கப்பட்டு மண்டகப்படி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லா ணியில் 108 திவ்யதேசங்களில் 44 வது சேத்திரமாக ஆதிஜெநாதபெருமாள் பத்மாஸனி தாயார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பங்குனி தேரோட்டத்தின் 8-ம் நாள் மண்டகப்படியானது அகமுடைய சமுதாய மக்களால் நடத்தப்படும் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வைக்கு புகழை சேர்க்கும் வகையில் நடத்தப்படும் ‘வெள்ளையன் சேர்வை மண்டகப்படியாகும்’.
சேதுபதி மன்னர்களிடம் தளபதியாய் இருந்தவர் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை. ஆனால் 70 ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்த மண்டகப்படியானது நடைபெற்றுள்ளது. அதன்பின்னர் மண்டகப்படியை முறைப்படி நடத்தாத தால், மண்டகப்படி மண்டபம் பாழடைந் தது. இன்றைய தலைமுறைகள் அறியாத வண்ணம் இருந்த மண்டகப்படி ‘வீரத் தளவாய் வெள்ளையன் சேர்வை சத்தி ரம்’ வரலாற்று மீட்புக்குழுவினரின் தீவிர முயற்சியால் இடிபாடுகளில் இருந்து மீட்டு மராமத்துப் பணிகள் நடந்தன.
இக்குழுவினர் பழமையான வெள்ளை யன் சேர்வை சத்திரத்தை ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் புனரமைத்தனர். அங்குள்ள கிணற்றைத் தூர்வாரியும், முன்பக்கம் பேவர் பிளாக் தளம் அமைத்தும், தகரக் கொட்டகை அமைத்தும் பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர். மேலும் அங்கு வருங் கால சந்ததியினருக்கு தினசரி சிலம் பம் பயிற்சியும் கற்றுக் கொடுத்து வரு கின்றனர்.
இதுகுறித்து வீரத் தளவாய் வெள்ளையன் சேர்வை அறக்கட்டளை தலைவர் ரெத்தினக்குமார் கூறுகையில், வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை சத்திரத்தைப் புனரமைத்துள்ளோம். இதன்மூலம் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு ஆன்மிக மரபுப்படி மண்டகப்படி நடைபெற்றது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT