Last Updated : 26 Mar, 2021 05:16 PM

 

Published : 26 Mar 2021 05:16 PM
Last Updated : 26 Mar 2021 05:16 PM

தண்ணீரே வழங்க முடியாதவர்கள் வாஷிங்மெஷின் கொடுக்கிறேன் என்கிறார்கள்: உதயநிதி ஸ்டாலின்

சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனை ஆதரித்து   இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

சிங்கம்புணரி

‘‘தண்ணீரே வழங்க முடியாதவர்கள் வாஷிங்மெஷின் கொடுக்கிறேன் என்கிறார்கள்,’’ என திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திமுக வேட்பாளர் தமிழரசியை ஆதரித்தும், சிங்கம்புணரியில் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனை ஆதரித்தும் மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: மோடி தமிழகம் மீது கோபமாக உள்ளார். அதைவிட தமிழக மக்கள் அவர் மீது கோபமாக உள்ளார்கள். இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும், தமிழகத்தில் அவர் ஜீரோ தான்.

மோடி அரசு தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக பல ஆயிரம் கோடி ரூபாயை தரவில்லை.

பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வால் மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் தமிழகத்தில் தண்ணீரை ஒரு குடம் ரூ.14-க்கு வாங்க வேண்டியுள்ளது. தண்ணீரே வழங்க முடியாதவர்கள் வாஷிங்மெஷின் கொடுக்கிறேன் என்று அறிவித்துள்ளனர்.

ரூ.500, ரூ.1,000 செல்லாது என அறிவித்து பலரது உயிரை பறித்தது மோடி அரசு. புதிய இந்தியா பிறக்க போகிறது என 3 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நான் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

ஓபிஎஸ், இபிஎஸ் ஜெயலலிதா, சசிகலாவிற்கு உண்மையாக இல்லை. பாஜகவோடு கூட்டணி வைக்க மாட்டோம் என ஜெயலலிதா கூறினார். ஆனால் அவர் மறைந்ததும் ஓபிஎஸ், இபிஎஸ் மோடி பேச்சை தான் கேட்கின்றனர். அதிமுகவிற்கு வாக்களித்தால் பாஜக தான் ஆட்சி செய்யும். அதிமுக பாஜகவின் கிளைக் கழகம்.

அதிமுகவை பாஜக அடிமையாக வைத்துள்ளது. தமிழக உரிமையை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டனர். வேளாண்மை சட்டத்திற்கு ஆதரித்து வாக்களித்துவிட்டு, நான் விவசாயி என்று சொல்கிறார்.

விவசாயி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காதவர் எப்படி விவசாயி என்று சொல்வார். கருத்துக் கணிப்பையும் தாண்டி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். பாஜக, அதிமுகவிற்கு டெப்பாசிட் கூட கிடைக்கவிடக்கூடாது

இதே ஊரைச் சேர்ந்த கலைஞரின் உதவியாளார் கருசெயல்மணி என்னை தூக்கி வளர்த்தவர். திமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும், என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x