Published : 26 Mar 2021 03:16 AM
Last Updated : 26 Mar 2021 03:16 AM
செஞ்சியில் நேற்று மாலை திமுக வேட்பாளர்கள் செஞ்சி மஸ்தான், மயிலம் மாசிலாமணி, திண்டிவனம் சீதாபதி ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச் சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:
கரோனா நோய்த் தொற்று தற்போது அதிகரித்துள்ளது. கூட்டத்திற்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.இங்குள்ள வேட்பாளர்களும் முகக் கவசம் அணியவில்லை. இப்போது சொல்லும்போது அணிகிறார்கள். நான் ஏன் அணியவில்லை என்றுகேட்கிறீர்களா...? நான் உயரத் தில், தூரத்தில் உள்ளேன். தடுப் பூசி போட்டுக்கொள்வதால் பாதிப்பில்லை. லேசான உடல் உபாதை கள் ஏற்பட்டு சரியாகிவிடும். நானும் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள். தடுப்பூசி போட்டுக்கொள் ளுங்கள்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் மிகவும் முக்கியம்.
கரோனா காலத்தில், ‘ஒன்றிணை வோம் வா’ திட்டத்தின் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தோம். அப்போது எம்எல்ஏ ஜெ அன்பழகன் கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.
அரசுப் பணத்தை தேர்தலுக்காக செலவிடும் ஆட்சி தற்போது நடந்து வருகிறது. விலைவாசியை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
34 ஆயிரத்தற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் அரிசி, சர்க் கரையைத் தவிர தேவையற்ற பொருட்களை மக்களிடம் திணிக் கிறார்கள்.
நான் முதல்வராக கனவு காண்பதாக பழனிசாமி சொல்கிறார். அவர் கனவைக் கூட காண முடியாது. முதல்வர் பழனிசாமி எங்கு சென்றாலும் தன்னைஒரு ‘விவசாயி’ என்று சொல்லிவருகிறார். அவர் ஒரு ‘போலிவிவசாயி’ பச்சை துண்டு போட்டுக் கொண்டால் விவசாயியா! எனக்கு விவசாயிகளைப் பிடிக்கும். போலி விவசாயிகளை பிடிக்காது. பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகம் செய்பவர்களை பிடிக்காது.
நீங்கள் உண்மையான விவசாயியாக இருந்தால் 3 வேளாண் சட்டங்களை ஆதரித்திருப்பீர்களா? டெல்லியில் போராடும் விவ சாயிகளை புரோக்கர் என கொச்சைபடுத்தும் நீங்கள் விவசாயியா? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என சொன்னாலும் நீதிமன்றம் வகுத்த விதிமுறைகள் கடைபிடிக்கப்படு கிறதா?
திமுக ஆட்சிக்கு வந்ததும் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதுதான் முதல் தீர்மானமாக இருக்கும். அதிமுக தேர்தலுக்குப் பின் எதிர்கட்சியாககூட உட்காரமுடியாது. தமிழை அழிக்க வும்,இந்தியை புகுத்தவும், சமஸ்கிருதத்தை கொண்டுவந்து மத வாத அரசியலை புகுத்தவும் பாஜக முயற்சிக்கிறது.
இங்குள்ள அதிமுக அதற்கு துணை போகிறது.இதற்கு திமுக தலைமையிலான கூட்டணி விடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT