Published : 25 Mar 2021 03:15 AM
Last Updated : 25 Mar 2021 03:15 AM

தோல்வி பயத்தால் முதல்வர் சாபம் விடுகிறார்: திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி கருத்து

திமுக வேட்பாளர்கள் பெரம்பலூர் எம். பிரபாகரன், குன்னம் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோரை ஆதரித்து கீழப்புலியூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.

பெரம்பலூர்/அரியலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கள் பெரம்பலூர் எம்.பிரபாகரன், குன்னம் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரை ஆதரித்து, பெரம் பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியது:

பெரம்பலூரில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சிறப்பு பொரு ளாதார மண்டலம், அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை அதிமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது மக்களுக்கான ஆட்சியா அல்லது காழ்ப்புணர்ச்சியில் நடத்தப்படும் ஆட்சியா?

அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், முதல்வர் பழனி சாமி பிரச்சாரத்தின்போது சாபம் விட்டு வருகிறார். தமிழகத்தில் நடைபெறுவது பாஜகவின் பினாமி ஆட்சி. மத்தியில் நிகழும் தவறு களை சுட்டிக்காட்டும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு. அதிமுக அமைச்சர்கள் ஊழ லில் வெற்றிநடை போடுகிறார்கள். கரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்குவதில் கூட ஊழல் நடை பெற்றுள்ளது. மக்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்க மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, அரியலூர் மாவட் டம் ஜெயங்கொண்டம் தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணனை ஆதரித்து, ஆண்டிமடம் கடைவீதியில் கனி மொழி எம்.பி பேசியது:

மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக முதல்வர் பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால், நான் விவசாயி, விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன் என பேசுகிறார்.

வெற்றிநடை போடும் தமிழ கம் என்ற விளம்பரம் முதல்வர் பழனிசாமிக்கு மட்டுமே பொருந்தும், பொதுமக்களுக்கு பொருந்தாது.

உடையார்பாளையத்தில் முந்திரி தொழிற்சாலை, தா.பழூ ரில் மகளிர் ஐடிஐ, ஜெயங் கொண்டத்தில் புதை சாக்கடை திட்டம், காகித தொழிற்சாலை, கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x