Published : 24 Mar 2021 12:04 PM
Last Updated : 24 Mar 2021 12:04 PM
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் ஏப். 3ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பிரச்சாரப் பயணங்களை மேற்கொண்டார். 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் திமுக முதன்மைத் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். மக்கள் கிராம சபைக் கூட்டங்களையும் மு.க.ஸ்டாலின் நடத்தினார். 'அதிமுகவை நிராகரிப்போம்' என்ற ஒற்றை வாக்கிய தீர்மானம் அந்த கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்டு திமுக தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரிலும் ஸ்டாலின் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரங்களின்போது பொதுமக்களிடம் தங்கள் குறைகளை எழுதி மனுக்களாகவும் வாங்கப்பட்டன. இந்த மனுக்கள் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் தீர்த்து வைக்கபடும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஏப்.6 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (மார்ச் 25) முதல் ஏப். 3ஆம் தேதி வரை 10 நாட்களுக்குத் தொடர் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பிரச்சாரப் பயணத்தின்போது, குறிப்பிட்ட இடங்களில் குறித்த நேரத்திற்கு பிரச்சாரத்திற்குச் செல்ல வேண்டியுள்ளதால், திமுகவினர், ஸ்டாலின் செல்லும் வழியில் எவ்வித நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (மார்ச் 24) வெளியிட்ட அறிவிப்பு:
இவ்வாறு திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT