Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM

நெல்லை, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை

நெல்லை, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக பகுதியில் காற்று வீசுவதில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக 23, 24-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியைஒட்டிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

25, 26-ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

22-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 3 செமீ, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் தலா 2 செமீ, கோவை மாவட்டம் வால்பாறை, தேனி மாவட்டம் சோத்துப்பாறை ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகிஉள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x