Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM
திமுக ஆட்சிக்கு வந்ததும் மீனவர் உரிமை நிலைநாட்டப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ராமநாதபுரம் அரண்மனை முன் திமுக வேட்பாளர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), ராஜ கண்ணப்பன் (முதுகுளத்தூர்), செ.முருகேசன் (பரமக்குடி), திருவாடானை காங்கிரஸ் வேட்பாளர் கரு மாணிக்கம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார். அப் போது அவர் பேசியதாவது:
கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அளித்த வாக்குறுதிகளை இது வரை நிறைவேற்றவில்லை. மீனவர் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முடி வும் எட்டப்படவில்லை.
2021 ஜனவரியில் நான்கு மீனவர்கள் கொலை செய்யப் பட்டனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தும் மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ள வில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் மீனவர் உரிமை நிலை நாட்டப்படும்.
சிறுபான்மையினருக்கு எதிராகவும் மத்திய, மாநில அரசு கள் துரோகம் செய்துள்ளன. குடியுரிமைச் சட்டத்தை அதி முகவும், பாமகவும் நாடா ளுமன்றத்தில் ஆதரித்து ஓட் டுப்போட்டதால் அச்சட்டம் நிறை வேற்றப்பட்டது. ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்போம் எனக் கூறியுள்ளனர். இதன் மூலம் சிறுபான்மை மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். அடுத்ததாக பெட் ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க முதல்வர் பழனிசாமி முன்வரவில்லை. இதனால் மளி கைப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் விலை உயர்ந்துள்ளன.
திமுக தேர்தல் அறிக்கையில் மீனவர்களைப் பழங்குடியினராக அறிவித்தல், மீனவர்களுக்கு 2 லட்சம் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து ள்ளோம். சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவோம். இதுமட்டுமின்றி திருச்சி கூட் டத்தில் அறிவித்த தொலை நோக்கு திட்டங்களான 7 வாக்கு றுதிகளையும் நிறைவேற்றுவேன்.
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தேர்தல் அறிக்கையில் அறிவிக் கப்பட்ட ராமேசுவரம், கீழக்கரை, பரமக்குடி நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப் படும்.
முதுகுளத்தூரில் அரசு பொறி யியல் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், நரிப்பையூரில் பின் னலாடை தொழிற்சாலை உள் ளிட்ட வாக்குறுதிகளும் நிறை வேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT