Published : 12 Nov 2015 11:14 AM
Last Updated : 12 Nov 2015 11:14 AM
கடலூரில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மீட்புப் பணிகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து ஆராய்வதற்காக கடலூர் சென்றுள்ள தமிழக அமைச்சர்கள் குழுவினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்தி லிங்கம், கே.ஏ.ஜெயபால், ஆர்.பி.உதயகுமார், சம்பத் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவார்கள் எனத் தெரிகிறது. மேலும், வெள்ள நிவாரணத் தொகையாக மத்திய அரசிடம் எவ்வளவு கேட்க வேண்டும் என்பது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், வெள்ள பாதிப்புகளை அவர்கள் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
பலி 32 ஆக அதிகரிப்பு:
இதற்கிடையில் கடலூரில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மின் சேவை சீரமைப்பு பணி துரிதம்:
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூரில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செயதிக்குறிப்பில், "கடலூரில் 2 ஆயிரம் மின் கம்பங்கள், 64 மின் மாற்றிகள், 226 கி.மீ. தொலை வுக்கு மின் வட கம்பிகள் சேதமடைந்துள்ளன.
மின் விநியோகத்தை சீரமைக்க கரூர், திருச்சி, தஞ்சை, காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு, கோவை, தருமபுரி ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் பணியாற்றும் 2,039 மின் பணியாளர்கள் மற்றும் 3 மேற்பார்வை பொறியாளர்கள் கடலூருக்கு சிறப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT