Published : 22 Mar 2021 03:14 AM
Last Updated : 22 Mar 2021 03:14 AM
தென் தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 9 தொகுதிகளின் வெற்றிக்காக மதுரையில் முகா மிட்டு தேர்தல் பணியாற்றி வரு கிறார் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களில் போட்டியி டுகிறது. இந்தமுறை தமிழக சட்டப் பேரவையில் பாஜக உறுப் பினர்கள் கால் பதிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள அக்கட்சி, அதற்கேற்ப தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.
பாஜகவில் தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய உள் துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி, இணைப் பொறுப் பாளராக முப்படைகளின் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றவரும், தற்போது மத்திய சாலைப் போக்குவரத்து இணை அமைச்சராகப் பதவி வகிப் பவருமான வி.கே.சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தென் தமிழக தேர்தல் பொறுப்பு வி.கே.சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் திருவை யாறு, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, காரைக்குடி, மதுரை வடக்கு ஆகிய 9 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. மத்திய அமைச்சர் வி.கே.சிங் மதுரையில் முகாமிட்டு 9 தொகுதிகளின் தேர்தல் பணியை ஒருங்கிணைத்து வருகிறார்.
பாஜக போட்டியிடும் தொகுதி களுக்கு நேரில் சென்று தேர்தல் பணியை எவ்வாறு எடுத்துச் செல்வது, கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து செயல்படுவது, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் தெரிவிப்பது, கட்சியின் முக்கியத் தலைவர்களைப் பிரச்சாரத்துக்கு அழைத்து வருவது, வெற்றிக்கான வியூகங்களை வகுப்பது உள்ளிட்ட பணிகள் தொடர்பாக கட்சியி னருடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT