Published : 22 Mar 2021 03:14 AM
Last Updated : 22 Mar 2021 03:14 AM
பிளஸ் 2 மாணவர்களையும் பாஸ் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
போடி தொகுதியில் போட்டி யிடும் அவர் நேற்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உப்பார்பட்டி, பாலகுருநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து சீலையம்பட்டிக்கு வந்த அவருக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
மதுரையில் எய்ம்ஸ் திட்டத்தை நிறைவேற்றவில்லை என ஸ்டாலின் கூறி வருகிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து நான் வரும் போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள 200 ஏக்கரில் சுற்றுச்சுவர் எடுக்கப்பட்டு உள்ளே சமன் செய்யும் பணி நடை பெறுகிறது. பணிகள் மேலும் துரிதப்படுத்தப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று 10 லட்சம் பேர் சென்னை மெரினாவில் திரண்டனர். இதைத் தொடர்ந்து வீர விளையாட்டுக்கு அனுமதி தர வேண்டும் என்று பிரதமரிடம் நேரில் சென்று பேசி னேன். இதனால், ஜல்லிக் கட்டுக்கு அனுமதி கிடைத்தது.
முன்னாள் முதல்வர் ஜெய லலிதா ஒவ்வொரு மாவட்டத் திலும் மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. உசிலம்பட்டி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பூ சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். அனைத்துக் குடும்பங்களுக்கும் வாஷிங் மிஷின், 6 கேஸ் சிலிண்டர்களை உறுதியாக வழங்குவோம்.
திருமண நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும். ரூ.12 ஆயிரம் கோடி விவசாயக்கடன் ஒரே அர சாணையில் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. சிறுபான்மையினரின் ஒரே பாதுகாப்பு அரண் அதிமுக, பாஜக அரசுகள்தான். பிளஸ் 2 மாணவர்கள் தங்களை பாஸ் என்று அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முதல்வருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பூமலைக் குண்டு,காட்டுநாயக்கன்பட்டி, தப்புக்குண்டு, தாடிச்சேரி பகுதி களில் அவர் பிரச்சாரம் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT