Published : 28 Nov 2015 08:47 AM
Last Updated : 28 Nov 2015 08:47 AM
தமிழக மழை வெள்ளச் சேதங் களை பார்வையிடும் மத்திய குழு, தென் மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, இங்கு பாதிக்கப் பட்டுள்ள மக்கள் மற்றும் விவ சாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடு கள் வெள் ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பிரதான தொழி லான உப்பளங்கள் மூழ்கியுள் ளன. குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகளுக்குள் மழைநீர் புகுந் துள்ளது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி யில் தண்ணீர் புகுந்துள்ளதால் ரூ. 3 கோடி மதிப்பிலான பொருட் கள் சேதமடைந்தன. இம்மாவட் டத்தில் 8 தற்காலிக முகாம்கள் அமைக் கப்பட்டு 2,830 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் கேட்டு தினமும் மறியல் நடை பெறுகிறது.
நெல்லை மாவட்டத்தில் சங்க ரன்கோவில் அருகே ஜமீன் இலந் தைகுளம் கிராமத்தில் கடந்த 17-ம் தேதி சூறாவளி வீசியதில் 120-க் கும் மேற்பட்ட வீடுகளின் ஓட்டுக் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. 8 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாநகரில் மன காவலம்பிள்ளை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது வரை வெள்ளம் வடியவில்லை. மீண்டும் மழை பெய்தால் மாவட் டம் முழுக்க பல நீராதாரங்களின் கரைகள் உடையும் அபாயம் இருக்கிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழைக்கு மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 600-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. இம்மூன்று மாவட் டங்களிலும் லட்சக்கணக்கான ஏக்கரில் நெல் நாற் றுகள், ஆடு, மாடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. சாலை கள் சிதிலமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மத்திய குழு
தமிழகத்தின் வடமாவட்டங் களில் வெள்ள சேதங்களை மத்திய குழு பார்வையிடுகிறது. இக்குழுவினர் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங் களிலும் பாதிப்புகளை ஆய்வு செய்து உரிய நிவாரணம் கிடைக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT