Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM

நீண்ட இழுபறிக்கு பிறகு மநீம வேட்பாளர்கள் வேட்புமனு ஏற்பு

நீண்ட இழுபறிக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மதுரவாயல் தொகுதியில் பத்மபிரியா வேட்பாளராக போட்டியிடுகிறார். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான பத்மபிரியா அளித்த வேட்பு மனுவின் இரண்டு பகுதிகளில் பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பத்மபிரியாவின் மனு ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நீண்ட இழுப்பறிக்கு பிறகு பத்மபிரியாவின் மனு நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஏற்கப்பட்டது.

இதே போல், ராயபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் குணசேகரன் போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்யும் போது வேட்பு மனுவில் கடைசி பக்கத்தில் இணைக்க வேண்டிய படிவத்தை வேறு பகுதியில் இணைத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால், வேட்பு மனுவை பரிசீலனை செய்த தேர்தல் நடத்தும் அதிகாரி குறிப்பிட்ட படிவம் இல்லை என்று கூறி நிறுத்தி வைத்தார். இதனை தொடர்ந்து, மறு பரிசீலனை செய்த போது, வேறொரு பகுதியில் அந்த படிவம் இருப்பது தெரியவந்தது. 2 மணி நேரத்துக்கு பிறகு அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டது. இவ்வாறு, நீண்ட இழுப்பறிக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய ஓராண்டில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்ட வேட்பாளர்கள் அரசியலுக்கு புதிது என்பதால் ஒரு சிலருடைய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

இந்தநிலையில், தற்போது சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தேர்தலுக்கு புதிது என்பதால் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதில் சிறிய குழப்பங்கள் எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x