Published : 16 Nov 2015 11:30 AM
Last Updated : 16 Nov 2015 11:30 AM

வீராணம் ஏரியை தூர்வாராததால் வெள்ள பாதிப்பு அதிகம்: அரசு ஒதுக்கிய ரூ.40 கோடியை இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் வைத்த அவலம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீராணம் ஏரியை தூர்வார ஒதுக் கப்பட்ட ரூ.40 கோடியை காலத்தே செலவு செய்திருந்தால் வீராணம் பகுதியில் வெள்ளப் பாதிப்புகளை வெகுவாக குறைத்திருக்கலாம் என்று விவசாயிகள் ஆதங்கப் படுகிறார்கள்.

வீராணம் ஏரியயில் 47.50 அடிக்கு (1,465 மில்லியன் கனஅடி) தண்ணீர் தேக்கப்படுகிறது. இதன் மூலம் 44,856 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசனம் பெறுகின்றன. இதுதவிர, சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 77 கன அடி நீர் ஏரியில் இருந்து அனுப்பப்படுகிறது. வெள்ளக் காலங்களில் வீராணத்தில் கூடுத லாக தண்ணீரைத் தேக்கி வைக்க வசதியாக, 2008-ல், ’வீராணம் ஏரி வெள்ள நீர் சேகரிப்புத் திட்டம்’ என்ற ஒரு திட்டம் ரூ.120 கோடியில் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டு இருந்தால் வீராணம் ஏரி சுமார் 2 அடியில் இருந்து 3 அடி ஆழத்துக்கு தூர்வாரப்பட்டு அதன் மூலம் வெள்ளக் காலங்களில் ஏரியில் கூடுதலாக 160 மில்லியன் கனஅடி நீரை சேமித்திருக்க முடியும். ஆனால், இந்த திட்டத்துக்கு ஏனோ அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த நிலையில், வீராணம் ஏரியை தூர்வாரிச் செப்பனிடுவதற்காக ரூ.40 கோடியை ஒதுக்குவதாக 2013-ம் ஆண்டு பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கையின்போது பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் அறிவித்தார். இந்த நிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் நிதி இருந்தும் வீராணம் ஏரி தூர்வாரப்படவில்லை.

கடலுக்கு போன 7 டிஎம்சி

இதுகுறித்து ‘தி இந்து’விடம் வீராணம் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வீர.இளங்கீரன் கூறியதாவது:

வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்குத் தண்ணீர் கொடுக்க தயங்கும் அதிகாரிகள், சென்னைக்குக் குடிநீர் அனுப்பு வதிலேயே குறியாக இருக்கிறார் கள். ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை யிலான காலத்தில் ஏரியில் 44 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக் கக் கூடாது என்று ககன்தீப்சிங் பேடி கடலூர் ஆட்சியராக இருந்த போது அதிகாரிகளுக்கு உத்தரவிட் டிருந்தார். ஆனால், சென்னைக்குத் தண்ணீர் தட்டுப்பாடு வந்துவிடக் கூடாது என்பதற்காக மழைக்கு முன்பு வரை 46 அடிக்கு ஏரியில் தண்ணீரைத் தேக்கி வைத்திருந் தார்கள். அத்தோடு வெள்ள நீரும் சேர்ந்துகொண்டதால் எதிர்பாராத அளவுக்கு சேதம் அதிகமாகி விட்டது. விவசாயத்துக்குத் தண் ணீர் திறக்க மறுத்த அதிகாரிகள் இப்போது வீராணம் தண்ணீரை வீணாக கடலுக்கு அனுப்பிக்கொண் டிருக்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே சுமார் 7 டிஎம்சி அளவு தண்ணீர் வீரா ணத்தில் இருந்து கடலுக்குப் போயிருக்கிறது.

இப்போது ஏரியில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் வீர நத்தம், திருநாரையூர், குமராச்சி உள்ளிட்ட 20 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்திருக்கிறது. சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. ஏரியைத் தூர்வாருவதற்காக அறிவிக்கப் பட்ட ரூ.40 கோடியை காலத்தே செலவழித்திருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது. சென் னைக்குத் தண்ணீர் கொண்டு செல் வது தடைபடாமல் ஏரியைத் தூர் வார நாங்கள் சொன்ன யோசனை யையும் அதிகாரிகள் அலட்சிப் படுத்திவிட்டார்கள். விளைவு, இப்போது நாங்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறையின் பொதுப் பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் கொள் ளிடம் வடிநில கோட்ட செயற் பொறியாளர் ராமமூர்த்தியிடம் கேட்ட போது, ’’ஏரியில் இப்போது 43.8 அடிக்கு தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியைத் தூர்வாருவதற்கு முதல் கட்டமாக ரூ.40 கோடியை அரசு ஏற்கெனவே ஒதுக்கிவிட்டது. ஆனால், ஏரியில் தண்ணீர் இருப் பதால் உடனடியாக தூர்வார முடிய வில்லை. மழைக் காலம் முடிந்ததும், வரும் பிப்ரவரி மாதம் ஏரியைத் தூர்வார திட்டமிட்டு வருகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x