Published : 19 Mar 2021 03:15 AM
Last Updated : 19 Mar 2021 03:15 AM
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் ஆலோ சனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசியது:
நம்முடைய துரோகியையும், எதிரியையும் வீழ்த்த இந்த தேர்த லில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த கால திமுக ஆட்சியில் என்னென்ன கொடுமைகள் நடந்தது என்பது குறித்தும் மக்களிடம் எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்யவேண்டும்.கடந்த 10 ஆண்டுகாலம் விழுப்புரம் நகரம் எவ்வளவு அமை தியாக இருந்தது என்று இங்குள்ள மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நன்கு தெரியும்.
இதுவரை நடந்த தேர்தல்களை விட இப்போது நடைபெறுகிற தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா தேர்தலாகும்.இந்த இயக்கம் காப்பாற்றப்பட வேண்டுமெனில் நாம் இந்த தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பாமக மாநில துணை பொதுச்செயலாளர் தங்கஜோதி, மாவட்ட செயலாளர் புகழேந்தி, வன்னியர் சங்க மாநில துணை செயலாளர் அன்புமணி, மாநில அமைப்பு துணை செயலாளர் பழனிவேல், பாஜக மாவட்ட பொருளாளர் சுகுமார், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் தசரதன், நகர தலைவர் ஹரிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம்
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவைச் சேர்ந்த கார்த்திகேயன் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து வேட்பாளர் அறிமுகக் கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன் தினம் விருத்தாசலத்தில் நடைபெற் றது. அக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சி.வி.சண் முகம், நம் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஓதுக்கிவைத்து, ஒன்றிணைந்து செயல் படுங்கள்.
இந்தத் தேர்தலில் வெற்றிபெறாவிட்டால் நாம் வேட்டி கட்டிக் கொண்டு நடமாட முடி யாது. யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சி அமைக்கக் கூடாது என்பது தான் நமக்கு முக்கியம். விருத்தாசலம் தொகுதியின் எம்எல்ஏ-வாக கலைச்செல்வன் இருந்தபோதிலும், தொகுதி பாமகவிற்கு விட்டுக்கொடுத்ததை் அவர் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டு தேர்தல் பணியாற்ற வந்துள்ளார். எனவே அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT