Published : 18 Mar 2021 01:25 PM
Last Updated : 18 Mar 2021 01:25 PM
மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிவிப்புகளை திராவிடக் கட்சிகள் காப்பி அடிக்கின்றன என்று அக்கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் சார்பாக மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீ பிரியா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் ஸ்ரீபிரியா பேசும்போது, “மயிலாப்பூர் தொகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. மேலும், இங்கு துப்புரவு பிரச்சினை உள்ளது. மீனவர்களின் முன்னேற்றத்துக்கான திட்டத்தையும் நாங்கள் வைத்திருக்கிறோம். என்ன திட்டம் என்பதை நான் தற்போது கூற முடியாது. ஏனெனில் பிற கட்சிகள் அதனை காப்பி அடித்துவிடுகின்றன.
மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகளை திராவிடக் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளாகத் தருகின்றன. எங்கள் வாக்குறுதிகளை வேறு யாரும் சொந்தம் கொண்டாட விடமாட்டோம்.
அதே மாதிரி ஒவ்வொரு கட்சியிலும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளனர். அவ்வாறே சினிமா பிரபலங்களும் இங்கு உள்ளனர். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பம் எங்களுக்கும் உள்ளது. எங்களைப் பிரிக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மக்கள் நீதி மய்யத்தின் இல்லத்தரசிகளுக்கான ஊக்கத்தொகை திட்டத்தை திமுக, அதிமுக கட்சிகள் அறிவித்ததாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT