Published : 07 Nov 2015 08:08 AM
Last Updated : 07 Nov 2015 08:08 AM
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக புதுக்கோட்டையில் போராட் டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சியில் நேற்று அமைச்சர் பூனாட்சி தலைமையில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக எம்.பி, எம்எல்ஏக்கள் பங்கேற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம் பக்குடி ஒன்றியக்குழு தலைவரான கெங்கையம்மாள், அவரது கணவர் சொக்கலிங்கம் மற்றும் சில கவுன்சிலர்கள் சில தினங்களுக்கு முன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அவரது வீட்டில் சந்தித்துள்ளனர். அப்போது விஜய பாஸ்கர் அவர்களை சாதியைச் சொல்லி திட்டியதாக தகவல் பரவியது.
இதையடுத்து அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு முத்தரையர் சமுதாய அமைப்புகள் சார்பில் புதுக்கோட் டையில் நேற்று முன்தினம் போராட் டம் நடைபெற்றது. போராட் டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதையடுத்து, இப்போராட்டம் மேலும் தீவிரமடையாமல் தவிர்க்க வும், பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காண்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அதிமுகவில் முக்கிய பொறுப்பிலுள்ள முத்தரையர் சமுதாய பிரமுகர்களுக்கு கட்சித் தலைமையில் இருந்து நேற்று முன் தினம் இரவு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
இதையடுத்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள அரசு விருந் தினர் மாளிகையின் ‘பி’ பிளாக்கில் நேற்று ரகசிய ஆலோசனைக் கூட் டம் நடைபெற்றது. அதில், அமைச் சர் பூனாட்சி, பெரம்பலூர் எம்.பி. மருதைராஜா, எம்எல்ஏக்கள் சிவபதி, பரஞ்சோதி, கு.ப.கிருஷ் ணன், வளர்மதி, முன்னாள் அமைச் சர் கே.கே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டி யதாகக் கூறப்படும் கறம்பக்குடி ஒன்றியக்குழு தலைவர் கெங்கை யம்மாள், அவரது கணவர் சொக்க லிங்கம் ஆகியோரும் வந்திருந்த னர். இதுதவிர, முத்தரையர் சமுதாயம் சார்ந்த சங்கங்களின் நிர்வாகிகளான செல்வக்குமார், பாஸ்கர், அருணாச்சலம் உள்ளிட் டோரும் பங்கேற்றனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடைபெற்றது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகி களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: புதுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டங்களுக்கும், தனக்கும் எவ்வித தொடர்பு இல்லை என ஆலோசனைக் கூட் டத்தின்போது கெங்கையம்மாளும், அவரது கணவரும் தெரிவித்து விட்டனர். அதேசமயம், அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்குமாறு விரைவில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் அவர் கள் தெரிவித்தனர்.
மேலும், திருச்சியைச் சேர்ந்த அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவரும், முத்தரையர் சமுதாயத்தைப் பற்றி அவதூறாக பேசியதாக புகார் கூறினர். இவை அனைத்தையும் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அமைச்சர், எம்எல் ஏக்கள் உறுதியளித்தனர்.
மேலும் இத்துடன் பிரச்சினையை முடித்துக்கொள்ளுமாறும் அமைச் சர் தரப்பில் வேண்டுகோள் விடுக் கப்பட்டுள்ளது. அதை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழியாக கட்சித் தலை மைக்கு கொண்டுசெல்லப்பட உள் ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT