Published : 18 Mar 2021 03:15 AM
Last Updated : 18 Mar 2021 03:15 AM
திமுக ஆட்சியில் எந்தத் திட்டங் களையும் நிறைவேற்றவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டினார்.
போடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை அவர் நேற்று தொடங்கினார். வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயிலில் நேற்று இரவு தரிசனம் செய்த பிறகு அரண்மனைப்புதூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: அடிப்படைப் பிரச்சினை களைத் தீர்த்து வைத்து உங்களில் ஒருவனாக வாழ்ந்து கொண்டிருக் கிறேன். தற்போது மீண்டும் உங்கள் வீட்டுப்பிள்ளையாக வாக்குக் கேட்டு வந்துள்ளேன். கடந்த 2 முறை போட்டியிட்டபோது கொடுத்த வாக்குறுதிகளை நூறு சதவீதம் நிறைவேற்றித் தந்துள் ளேன்.
18-ம் கால்வாய் திட்டம் நீட்டிப்பு, அரசு கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், ஐடிஐ என்று ஏராளமான அரசு கல்வி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழை மாணவர்கள் குறைந்த கட்டணத் தில் படிக்கும் வசதியைப் பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் தெருவோர, ஆற்றங்கரையோரம் வசிக்கும் 12 லட்சம் குடும்பங் களுக்கு வரும் 2023-ம் ஆண்டுக் குள் கான்கிரீட் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இதுவரை 2,300 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கூடு தல் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மகளிருக்கு தாலிக்குத் தங்கம், பேறுகால நிதியுதவி போன்ற திட்டங்களுக்கான தொகை தற்போது உயர்த்தி அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு என்ன தேவை என்பதைப் பார்த்து பார்த்து இந்த அரசு செய்து வருகிறது. ஆனால் திமுக, காங்கிரஸ் ஆட்சியில் மக்களின் தேவையை அறிந்து எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. ஒரு பக்கம் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள், இன்னொருபுறம் கரோனா தொற்றை எதிர்கொள்ளுதல் என்று தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்பேசினார்.
அப்போது ரவீந்திரநாத் எம்.பி., ஒன்றியச் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT