Published : 17 Mar 2021 06:48 PM
Last Updated : 17 Mar 2021 06:48 PM

ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை இல்லை: குஷ்பு

ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை இல்லை என்று என்று பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். முன்னதாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி அவருக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அதிமுக அந்தத் தொகுதியைப் பாமகவுக்கு ஒதுக்கியது. இதையடுத்து ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவைப் பாஜக தலைமை, வேட்பாளராக நிறுத்தியது. குஷ்பு திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் நடைபெற்றது. இதில் குஷ்பு கலந்து கொண்டார்.

இதில், செய்தியாளர்கள் சந்திப்பில் குஷ்பு பேசும்போது, “ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை இல்லை. அவ்வாறு அவர்களே கருதவில்லை. அப்படி இருந்தால் ஸ்டாலின் ஏன் கொளத்தூரில் போட்டியிடுகிறார்? உண்மையில் தைரியம் இருந்தால் ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டிருக்க வேண்டும்.

நான் எந்த எதிர்க்கட்சி வேட்பாளரையும் குறைவாக எண்ணவில்லை. யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆயிரம் விளக்கு தொகுதியில் மக்களுக்கு நிறைய அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன. உழைப்பதற்கு நான் முன்வந்திருக்கிறேன். இவ்வாறு இருந்தால் நிச்சயம் நான் வெற்றிக்கொடியை நோக்கிச் செல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x