Published : 17 Mar 2021 08:03 AM
Last Updated : 17 Mar 2021 08:03 AM

வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக அதிமுக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

நத்தம் 

வாக்காளர் வாக்களிக்க லஞ்சம் வழங்கியதாக குற்றப்பிரிவு 171 E ன் கீழ் நத்தம் போலீசார் நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.விசுவநாதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தல் பிரிவு வீடியோ கண்காணிப்பு குழு தலைவர் மைக்கேல் ஆரோக்கியராஜ் புகாரின் பேரில் நடவடிக்கை..

ஏற்கெனவே, இது தொடர்பாக திமுக வேட்பாளர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுநாதன் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன் தினம் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். நத்தம் தொகுதிக்குட்பட்ட முளையூர் கிராமத்தில் காலையில் தொடங்கியவர், தொடர்ந்து புன்னபட்டி, காட்டுவேலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். காட்டுவேலம்பட்டி கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டாது, அவரை ஆரத்திஎடுத்து வரவேற்க பெண்கள் ஆரத்திதட்டுடன் காத்திருந்தனர்.

அங்கு பிரச்சாரத்திற்கு வேட்பாளர் வந்தபோது அதிமுக பிரமுகர் ஒருவர் வரிசையாக வைக்கப்பட்டிருந்த ஆரத்தி தட்டில் பணம் போடப்பட்டது. இதையடுத்து ஒரு வீட்டின் முன் ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்தபோது வேட்பாளரே தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்தார். தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக அதிமுக வேட்பாளர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்திற்கு சென்றபோது பிரச்சாரத்தை கண்காணிக்க எந்தத் தேர்தல் அலுவலரும் அவரை பின்தொடரவில்லை. தேர்தல் விதிமுறைகளை மீறி ஏராளமான கார்கள் பின்தொடர பிரச்சாரம் நடந்தது. மேலும் பணம் வினியோகம் செய்ததை தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் கண்டுகொள்ளாவில்லை. 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பிரச்சாரத்தில் பின்தொடர்ந்தபோதும் எந்தவாகனத்தையும் சோதனையிடவில்லை.

இது ஒரு தலைபட்சமானது, தேர்தல் அலுவலர்கள் பாரபட்சமாக நடந்துகொள்கின்றனர் என பிற கட்சியினர் குற்றம்சாட்டினர். இவரை எதிர்த்துபோட்டியிடும் திமுக வேட்பாளர் ஆண்டிஅம்பலம், அதிமுக வேட்பாளர் பணம் பட்டுவாடா செய்ததுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

முன்னாள் அமைச்சர் நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் விசுவநாதன் பணம் வினியோகம் செய்த வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது தொடர்பாக , தேர்தல் பிரிவு வீடியோ கண்காணிப்பு குழு தலைவர் மைக்கேல் ஆரோக்கியதாஸ் கடந்த 16.03.21 தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தின் போது அதிமுகவினர் பொதுமக்களுக்குப் பணம் வினியோகம் செய்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் வாக்காளர்களுக்கு வாக்களிக்க லஞ்சம் கொடுத்ததாக 171E பிரிவின் கீழ் நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x