Published : 17 Mar 2021 03:15 AM
Last Updated : 17 Mar 2021 03:15 AM

மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் வாக்கு

கோப்புப்படம்

விழுப்புரம்

சட்டமன்றத்தேர்தலில் மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது நோய் தொற்று இருக்கலாம் என யூகத்திற்கு உரிய வாக்காளர்கள் ஆகியோருக்கு விருப்பத்தின் அடிப்படையில் தபால் வாக்கு முறையில் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் அண்ணாதுரை வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியி ருப்பதாவது:

சட்டமன்றத்தேர்தலில் மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது நோய் தொற்று இருக்கலாம் என யூகத்திற்கு உரிய வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில். விண்ணப்பப் படிவம் - 12 டி -யுடன் தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் என்பதற்கான சான்று மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கான சான்றைசமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் முறையாகஇருக்கும்பட்சத்தில் அவ்விண்ணப்பங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஆவணங்கள் சரியாக இருந்தால் அவ் வாக்காளர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்படும்.

இந்த வாக்காளர்களின் வசிப்பிடத்திற்கு செல்லும் முன் அல்லது செல்ல இருக்கும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களை தொலைபேசி மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வாக்குப்பதிவு செய்யும் அதிகாரிகள் தெரிவிப்பார்கள். அவ்வாறு தபால் வாக்கு பெறுவதற்காக அதிகாரிகள் வரும்போது, மேற்படி ஓட்டளிப்பதை பார்வையிட தகுதியான ஒருவரை வாக்காளர்களே தேர்வு செய்து பார்வையிட செய்யலாம்.

வாக்காளர்களால் சரியாக பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பமிடப்பட்டு, வாக்குப்பதிவு அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட உறுதியளிக்கும் படிவமான 13 ஏ படிவத்துடன், ஓட்டு பதிவு செய்யப்பட்ட வாக்குச்சீட்டை கடித உறையினுள் வைத்து ஒட்டி அக்குழுவிடம் வாக்காளர்கள் ஒப்படைக்க வேண்டும். தபால் வாக்களிக்கும் நிகழ்வு முழுவதும் காணொலியாக பதிவு செய்யப்படும். வாக்குப்பதிவு செய்ய வரும் குழுவின் வருகையின்போது வாக்காளர் வீட்டில் இல்லையெனில், முன்கூட்டியே தகவல் அளித்து இரண்டாவது முறையும் வருகைதருவர். அதிகாரிகளது இரண்டா வது வருகையின்போதும் வாக்காளர் வீட்டில் இல்லையெனில் மீண்டும் வரமாட்டார்கள்.

தபால் வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க அனுமதிக் கப்பட மாட்டார்கள் என அந்த அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x