Published : 16 Mar 2021 07:21 PM
Last Updated : 16 Mar 2021 07:21 PM
இந்தியாவைச் சேர்ந்த அப்போலோ மருத்துவமனைகள் குழுமம், ஆசியாவிலேயே முதல் முறையாக ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு மிட்ராக்ளிப் மருத்துவ சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.
ஜப்பானில் ஒரு நாளில் மூன்று நோயாளிகளுக்கு மிட்ராக்ளிப் உள்வைப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதே சாதனையாக இருந்தது. தற்போது சென்னை அப்போலோ ஹாஸ்பிடல்ஸின் சினீயர் இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர். சாய் சதீஷ், அடுத்தடுத்து மிட்ராக்ளிப் மருத்துவ நடைமுறைகளை [MitraClip procedures] வெற்றிகரமாகச் செய்திருப்பதன் மூலம் சென்னை அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.
மிட்ராக்ளிப் மருத்துவ நடைமுறையில் பயன்படுத்தப்படும் குறைந்தபட்ச ஊடுருவும் சிகிச்சை முறை, இதயத்தைத் திறந்து செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு அவசியமில்லாமல், கசியும் மிட்ரல் வால்வைச் சரிசெய்ய உதவுகிறது, மேலும் அறுவை சிகிச்சையின் அபாயமுள்ள நோயாளிகளுக்கு வாழ்வு அளிக்கும் மருத்துவ நடைமுறையாகவும் இருக்கிறது. மிட்ராக்ளிப் உள்வைப்புகள் மேற்கொள்ளப்பட்ட நான்கு நோயாளிகளில் மிக அதிக வயதுடையவருக்கு 87 வயதாகிறது. இச்சிகிச்சை முடிந்த 3 நாட்களுக்குள் அவர் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
இதுகுறித்து அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறுகையில், “ஆசிய கண்டத்தில் பல முதல் மைல்கல் சாதனைகளை எங்களது அறுவை சிகிச்சை நிபுணர்கள் படைத்து வருகிறார்கள் என்பது உண்மையில் எங்களுக்கு மிகவும் பெருமையளிக்கும் விஷயம். அப்போலோ மருத்துவமனைகளில், எங்களிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் அவர்களுக்கேற்ற சுகாதார தீர்வுகளை வழங்குவதை உறுதிசெய்வதில் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். அறுவை சிகிச்சை மேற்கொள்வதினால் அபாயமுள்ள கடுமையான மிட்ரல் கசிவுள்ள நோயாளிகளுக்கு மிட்ராக்ளிப் மூலம் சிகிச்சையளிக்க முடிகிறது.
இந்த மருத்துவ நடைமுறை அவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கையை அளிக்க உதவுகிறது. தற்போது வரை, 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் 100,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மிட்ராக்ளிப் மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற இதயச் செயலிழப்பு நோயாளிகளுக்கு மிட்ராக்ளிப் மருத்துவ நடைமுறையைச் செய்வதற்கு அங்கீகாரம் பெற்ற இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில மருத்துவமனைகளில் அப்போலோ ஹாஸ்பிடல்ஸூம் ஒன்று என்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.’’ என்றார்.
அப்போலோ ஹாஸ்பிடல்ஸின் சினீயர் இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் சாய் சதீஷ் கூறுகையில், “நாங்கள் மூன்று ஆண்டுகளாக மிட்ராகிளிப் மருத்துவ நடைமுறைகளைச் செய்து வருகிறோம். எங்கள் ஆழ்ந்த, முழுமையான அனுபவத்தின் மூலம் பெறப்பட்ட நம்பிக்கையே கடுமையாக பாதிக்கப்ட்ட நான்கு நோயாளிகளுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து மிட்ராக்ளிப் உள்வைப்பு நடைமுறையை மேற்கொள்ள எங்களுக்கு உதவியிருக்கிறது.
உண்மையில், எங்களது திட்டமிடலின் படி அந்த நாளில் 2 நோயாளிகளுக்கு மட்டுமே அதைச் செயல்படுத்த இருந்தோம். ஆனால் மற்ற இரண்டு நோயாளிகளும் விரைவாக முடங்கிப் போக, உடனடியாக அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இதனால் ஆழ்ந்த அனுபவமிக்க அணியின் உதவியுடன், இடைவிடாமல் தொடர்ந்து இணைந்து செயல்பட்டதால், அடுத்தடுத்து மிட்ராக்ளிப் மருத்துவ நடைமுறைகளை வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடிந்தது. இந்த மாபெரும் வெற்றி அப்போலோ மருத்துவமனைகளில் எங்களது ஒட்டுமொத்த அணியின் நம்பிக்கையை மேலும் அதிகரித்து இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT